நித்தி ஆயோக்
பள்ளிகளில் புதிய பயிற்சிகளை உருவாக்க அடல் புதுமை இயக்கமும், சிஜிஐ நிறுவனமும் ஒன்றிணைந்துள்ளன
प्रविष्टि तिथि:
13 OCT 2020 3:48PM by PIB Chennai
பள்ளிகளில் புதிய பயிற்சிகளை உருவாக்குவதற்காக, நிதி ஆயோகின் அடல் புதுமை இயக்கமும், சிஜிஐ நிறுவனமும் இணைந்து ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் சிஜிஐ நிறுவனம் பெங்களூரு, சென்னை, ஐதராபாத் மற்றும் மும்பையில் அடல் டிங்கரிங் ஆய்வகத்துடன் கூடிய 100 பள்ளிகளை தத்தெடுத்து, அவற்றில் பயிலும் மாணவர்களுக்கு பயிற்சியை அளிக்கும். இந்த நிறுவனத்தின் தன்னார்வத் தொண்டர்கள், டிங்கரிங் ஆய்வகத்தின் உதவியுடன் மாணவர்களுக்கு அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதத்தில் செய்முறை பயிற்சியை வழங்குவர்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1663991
**********************
(रिलीज़ आईडी: 1664058)
आगंतुक पटल : 354