புவி அறிவியல் அமைச்சகம்
காக்கிநாடாவுக்கு அருகே வடக்கு ஆந்திரப் பிரதேச கடற்கரையை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்தது
Posted On:
13 OCT 2020 9:11AM by PIB Chennai
இந்திய வானிலைத் துறையின் புயல் எச்சரிக்கை பிரிவு அளித்துள்ள தகவல்கள் வருமாறு:
மேற்கு மத்திய வங்காள விரிகுடாவில் மையம் கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மணிக்கு பதினேழு கிலோமீட்டர் என்ற வேகத்தில் நகர்ந்து இன்று காலை 5.30 மணி அளவில் விசாகப்பட்டினத்தில் இருந்து 120 கிலோ மீட்டர் தொலைவில் தெற்கு தென்மேற்கிலும், காக்கிநாடாவுக்கு அருகிலும் (25 கிலோ மீட்டருக்குள்) இருந்தது.
சமீபத்திய தகவல்களின் படி, காக்கிநாடாவுக்கு அருகே வடக்கு ஆந்திரப் பிரதேச கடற்கரையை இன்று காலை 6.30 மணியில் இருந்து 7.30 மணிக்குள் காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்தது. அப்போது மணிக்கு 55 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியது.
மசூலிப்பட்டினம், விசாகப்பட்டினம் மற்றும் கோபால்பூர் ஆகிய இடங்களில் உள்ள டாப்ளர் வானிலை கண்காணிப்பு கருவிகளின் மூலம் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்தது.
மேற்கு மத்திய மற்றும் அதை ஒட்டிய வட மேற்கு வங்காள விரிகுடா, தென் மேற்கு வங்காள விரிகுடா, மற்றும் ஒடிசா, ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் கரையோர பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்தி குறிப்பை படிக்கவும்
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1663893
*****
(Release ID: 1663893)
(Release ID: 1663928)