தேர்தல் ஆணையம்
நடைபெறவுள்ள பிகார் மாநில சட்டமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவில் 71 தொகுதிகளில் உள்ள 52000-கும் மேற்பட்ட தகுதி பெற்ற வாக்காளர்கள், தபால் வாக்கு முறைக்கு ஆதரவு
கொவிட்-19-ஐக் கருத்தில் கொண்டு, எளிய, அனைவரையும் உள்ளடக்கிய, பாதுகாப்பான முறையில் தேர்தலை நடத்தத் தேர்தல் ஆணையம் தபால் வாக்கு முறைக்கு தகுதி பெற்ற வாக்காளர்களை நாடியுள்ளது
प्रविष्टि तिथि:
12 OCT 2020 3:28PM by PIB Chennai
நடைபெறவுள்ள பீகார் மாநில சட்டப் பேரவைக்கான முதற்கட்ட வாக்குப்பதிவிற்கு 80 வயதிற்கும் அதிகமான மற்றும் மாற்றுத்திறனாளிகள் 52000- கும் மேற்பட்ட வாக்காளர்கள் தபால் வாக்கு முறைக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இவர்கள், குறிப்பிட்ட தேதியில் பாதுகாப்பான வழியில் தபால் வாக்குகளை செலுத்தத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். முதன்முறையாக பிகார் தேர்தலில் இரு பிரிவினருக்கு தபால் வாக்கு முறை வழங்கப்படுகிறது.
71 சட்டமன்ற தொகுதிகளைச் சேர்ந்த 4 லட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்களிடம் கருத்துக் கேட்கப்பட்ட நிலையில் எஞ்சியவர்கள் தேர்தல் நாளன்று நேரில் வந்து தங்கள் வாக்குகளை செலுத்த விருப்பம் தெரிவித்துள்ளனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1663689
**********************
(रिलीज़ आईडी: 1663727)
आगंतुक पटल : 178