இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்

ஹங்கேரியில் நடைபெறும் சர்வதேச ஜூடோ கூட்டமைப்பின் கிராண்ட் ஸ்லாம் 2020 போட்டியில் கலந்துகொள்ளும் இந்திய ஜூடோ வீரர்களின் பயணச் செலவை அரசே ஏற்பு

Posted On: 11 OCT 2020 6:59PM by PIB Chennai

இம்மாதம் 23-ஆம் தேதியிலிருந்து 26-ஆம் தேதி வரை ஹங்கேரியின் புடபெஸ்ட் நகரத்தில் நடைபெறும் சர்வதேச ஜூடோ கூட்டமைப்பின் கிராண்ட்ஸ்லாம் 2020 போட்டியில் 5 இந்திய வீரர்கள் கலந்து கொள்கின்றனர். இவர்களது பயணச் செலவு முழுவதையும் அரசே ஏற்கவிருக்கிறது.

இந்தப் போட்டியில் பங்கேற்பதற்காக 2 பெண்களும் 3 ஆண்களும் வரும் 19-ஆம் தேதி ஹங்கேரி செல்கின்றனர். 81 நாடுகளைச் சேர்ந்த 645 வீரர்- வீராங்கனைகள் இந்த சர்வதேச ஜூடோ போட்டியில் கலந்து கொள்கிறார்கள்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1663559

---- 


(Release ID: 1663599) Visitor Counter : 84