புவி அறிவியல் அமைச்சகம்
வங்க கடலில் குறைந்த காற்றழுத்தம்; அடுத்த 24 மணி நேரத்தில் தீவிரமடைய வாய்ப்பு
Posted On:
11 OCT 2020 10:21AM by PIB Chennai
இந்திய வானியை மையம் புயல் எச்சரிக்கை பிரிவு விடுத்துள்ள தகவல்:
செயற்கை கோள் மற்றும் வானிலை கண்காணிப்பு மையங்கள் சமீபத்தில் எடுத்த படங்கள் மற்றும் கண்காணிப்பு தகவல்கள் படி, கிழக்கு மத்திய மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் நேற்று உருவாகிய குறைந்த காற்றழுத்தம், மேற்கு மத்திய வங்க கடல் பகுதியில், விசாகப்பட்டினத்துக்கு (ஆந்திர பிரதேசம்) தெற்கு மற்றும் தென்மேற்கே 430 கி.மீ தொலைவில், இன்று காலை (அக்டோபர் 11, 2020) 5.30 மணியளவில் ஆழ்ந்த காற்றழுத்த பகுதியாக உருவாகியுள்ளது. இது அடுத்த 24 மணிநேரத்தில் மேலும் தீவிரமடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாற வாய்ப்புள்ளது.
இது மேற்கு - வடமேற்கு நோக்கி நகர்ந்து வடக்கு ஆந்திர பிரதேசம் கடற்கரை பகுதியில் நரசாபூர் மற்றும் விசாகப்பட்டினம் இடையே 2020, அக்டோபர் 12ம் தேதி இரவு கடக்கும் எனத் தெரிகிறது.
எச்சரிக்கை:
(1) மழைபொழிவு எச்சரிக்கை
ஆந்திர பிரதேசம், தெலங்கானா, ராயலசீமா, கர்நாடகா, மராத்வாடா, தெற்கு ஒடிசா, மற்றும் தெற்கு சட்டீஸ்கர் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழையும், ஆந்திர பிரதேசம், தெலங்கானா, ராயலசீமா மற்றும் கர்நாடகாவின் உள் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இன்று (2020, அக்டோபர் 11) கன மழை முதல் மிக கன மழை பெய்யும் வாய்ப்புள்ளது.
(2) காற்று எச்சரிக்கை
மேற்கு மத்திய மற்றும் அதனையொட்டியுள்ள வங்க கடல் பகுதியில் இன்று மணிக்கு 45 முதல் 65 கி.மீ வேகத்தில் காற்று வீசும். ஒடிசா, ஆந்திரா, தமிழ்நாடு, புதுச்சேரி கடல் பகுதியில் இன்று மணிக்கு 40 முதல் 60 கி.மீ வேகத்தில் காற்றும் வீசும்.
(3) கடல் நிலவரம்
மேற்கு மத்திய மற்றும் அதனையொட்டியுள்ள வடமேற்கு வங்க கடல் பகுதிகள், ஒடிசா, ஆந்திரா, தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர பகுதி, மன்னார் வளைகுடா பகுதி கொந்தளிப்பாக காணப்படும்.
(4) மீனவர்களுக்கான எச்சரிக்கை
மேற்கு மத்திய மற்றும் அதனையொட்டிய வடகிழக்கு மற்றும் தென் மேற்கு வங்க கடல் பகுதி, ஒடிசா, ஆந்திரா, தமிழகம் புதுச்சேரி கடல் பகுதி மற்றும் மன்னார் வளைகுடா பகுதிக்கு இன்று முதல் அடுத்த 2 நாட்களுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றனர்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்தி குறிப்பை படிக்கவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1663472
------
(Release ID: 1663515)
Visitor Counter : 233