ரெயில்வே அமைச்சகம்

வாகன உற்பத்தி தொழிலின் தலைவர்களோடு அமைச்சர் திரு பியூஷ் கோயல் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து வாகனங்களை அதிக அளவில் ரயில்களில் அனுப்ப முடிவு

Posted On: 10 OCT 2020 6:15PM by PIB Chennai

வாகனங்களை இரயில்களில் அனுப்புவது குறித்து வாகன உற்பத்தி தொழிலின் தலைவர்களோடு ரயில்வே, வர்த்தகம் மற்றும் தொழில்கள், நுகர்வோர் நலன் மற்றும் உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சர் திரு பியூஷ் கோயல் பேச்சுவார்த்தை நடத்தினர்.

வாகனங்களை எடுத்துச் செல்லும் தொழிலில் 20 சதவீத பங்கை 2021-22-ஆம் ஆண்டின் இறுதிக்குள்ளும், 30 சதவீத பங்கை 2023-24 ஆம் ஆண்டுக்குள்ளும் அடைய ரயில்வே இலக்கை நிர்ணயித்துள்ளது.

இந்திய வாகன உற்பத்தியாளர்கள் சங்கம் மற்றும் வாகன சக்கர உற்பத்தியாளர்கள் சங்கத்திற்கு அவர்களின் அனைத்து குறைகளையும் முன்னுரிமை அடிப்படையில் தீர்ப்பதாக இந்திய ரயில்வே உறுதி அளித்துள்ளது.

 

ரயில்களில் வாகனங்களை எடுத்துச் செல்வதற்கான முனைய கட்டணங்களில் இருந்து முழு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

ரயில்களில் வாகனங்களை எடுத்துச் செல்வதற்காக 7 புதிய முனையங்கள் 2020-ஆம் ஆண்டில் திறக்கப்பட்டுள்ளன.

டாடா மோட்டார்ஸ், ஹூண்டாய் மோட்டார்ஸ், போர்டு மோட்டார்ஸ், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, ஹோண்டா இந்தியா மற்றும் மாருதி சுசுகி லிமிடெட் ஆகிவை இந்திய வாகன உற்பத்தியாளர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள் ஆவார்கள்.

இந்திய ரயில்வேயின் இந்த முடிவை வாகன சரக்கு ரயில் செயல்பாட்டாளர்கள் மற்றும் வாகன சக்கரங்கள் உற்பத்தியாளர்கள் வரவேற்றுள்ளனர்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்தி குறிப்பை படிக்கவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1663406

----  



(Release ID: 1663431) Visitor Counter : 123