ரெயில்வே அமைச்சகம்

ரயில்வே அமைச்சர் திரு பியூஷ் கோயல் மற்றும் அதிகாரிகள் கொவிட் உறுதி மொழி ஏற்றனர்

இடுகை இடப்பட்ட நாள்: 09 OCT 2020 7:09PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்த கொவிட் 19, பிரசார மக்கள் இயக்கத்தில் ரயில்வே துறையும் இணைந்தது. ரயில்வே அமைச்சர் திரு பியூஷ் கோயல், ரயில்வே அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் காணொலி காட்சி மூலம் கொவிட் உறுதிமொழி ஏற்றனர். இதில் மண்டல ரயில்வே பொது மேலாளர்கள், ரயில்வே உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்

தேசிய அளவிலான இந்த மக்கள் இயக்கத்தில், பங்கேற்க முன்வர வேண்டும் என ரயில்வே அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு ரயில்வே வாரிய தலைவர் திரு வினோத் குமார் யாதவ் அறிவுறுத்தியுள்ளார்கொவிட் நெறிமுறைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், ரயில்வே அலுவலகங்கள்/நிலையங்கள் அருகில் உள்ள மக்களுடன் இணைந்து பிரசாரம்  மேற்கொள்ள வேண்டும் என அவர் ரயில்வே அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்

முதல்நாள் மக்கள் பிரசார நிகழ்ச்சியில், நாடு முழுவதும்,  5,41,087 ரயில்வே ஊழியர்கள் ஊறுதி மொழி ஏற்றனர். 2452 ரயில் நிலையங்கள், 847 ரயில்வே அலுவலகங்கள், 273 ரயில்களில் கொவிட் பேனர்கள் மற்றும் போஸ்டர்கள் மூலம் கொவிட் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. 2060 ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் உள்ள ஒலிபெருக்கிகள் மூலமாக கொவிட் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்தியை பார்க்கவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1663211

-----


(வெளியீட்டு அடையாள எண்: 1663391) வருகையாளர் எண்ணிக்கை : 167
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Punjabi , Telugu