சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்

வெளிநாட்டில் பயணத்தில் இருக்கும்போது, சர்வதேச ஓட்டுநர் உரிமத்தை புதுப்பிக்கும் வசதி குறித்த ஆலோசனைகள் பொதுமக்களிடம் இருந்து வரவேற்கப்படுகின்றன

இடுகை இடப்பட்ட நாள்: 10 OCT 2020 12:44PM by PIB Chennai

வெளிநாட்டில் இருக்கும்போது இந்தியர்களின் ஐடிபி காலாவதியாகும்போது, சர்வதேச ஓட்டுநர் உரிமம் வழங்கும் வசதிகளுக்கு ஏற்ற வகையில் மத்திய மோட்டார் வாகனங்கள் விதிகள் 1989-ல் திருத்தங்கள் செய்வதற்கான 2020 அக்டோபர் 7-ம் தேதியிட்ட மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை வெளியிட்ட வரைவு அறிவிக்கை  GSR 624 (E)  மீது ஆலோசனைகள் மற்றும் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன.

இந்தியர்கள் வெளிநாட்டில் பயணம் மேற்கொள்ளும்போது, சர்வதேச ஓட்டுநர் உரிமம் காலாவதி ஆகும்போது வெளிநாட்டில் இருந்தபடியே அதனை புதுப்பிப்பதற்கான நடைமுறை ஏதும் இல்லை என்பது குறித்த சில நிகழ்வுகள் துறையின் கவனத்துக்கு வந்தன. எனவே, மக்களுக்கு வசதி அளிக்கும் வகையில் சிஎம்விஆர் 1989-ல் திருத்தம் கொண்டு வர தீர்மானிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டில் இருக்கும் இந்தியர்கள் இந்திய தூதரகங்களின் வெளிநாடு இணையதளங்கள் வாயிலாக ஓட்டுநர் உரிமத்தை புதுபிக்க விண்ணபிக்கலாம் மற்றும் அந்த விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட ஆர்டிஓ-க்கள் பரிசீலனை செய்வதற்காக விஏஎச்ஏஎன்-னுக்கு அனுப்பப்படும்.

மருத்துவ சான்று மற்றும் தகுதி வாய்ந்த ஓட்டுநர் உரிமம் வைத்திருந்தால் இன்னொரு மருத்துவ சான்று தேவையில்லை என்றும் ஐடிபி-யை புதுப்பிக்க கோரும்போது செல்லுபடியாகும் தகுதி வாய்ந்த விசா, மேலும், நாட்டுக்குள் நுழைந்ததும் விசா பெற்றுக்கொள்ளும் வசதியைக் கொண்ட சில நாடுகள் மற்றும் பயணத்துக்கு முன்பு இந்தியாவில் ஐடிபி-யை புதுப்பிப்பதற்காக விண்ணப்பிக்கும்போது விசா இல்லாத நிகழ்வுகள் ஆகிய நிபந்தனைகள் நீக்குவதற்கான பரிந்துரைகளும் சேர்க்கப்பட்டுள்ளன.

பொதுமக்கள் தங்கள் கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை இணை செயலாளர் (MVL,IT & Toll), மின்னஞ்சல்;  jspb-morth[at]gov[dot]in  சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம், போக்குவரத்து பவன், நாடாளுமன்ற தெரு, புதுதில்லி-110 001 என்ற முகவரிக்கு அறிவிக்கை வெளியிடப்பட்ட 30 நாட்களுக்குள் அனுப்பலாம்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்தியை பார்க்கவும்;

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1663348

--- 


(வெளியீட்டு அடையாள எண்: 1663376) வருகையாளர் எண்ணிக்கை : 179