தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் குறித்த நம்பகமான தரவுகள் தேவை: திரு கங்க்வார்

Posted On: 09 OCT 2020 5:28PM by PIB Chennai

புது தில்லியில் உள்ள தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தில் 2020 அக்டோபர் 8 அன்று நடைபெற்ற தொழிலாளர் அலுவலக ஆய்வுகளுக்கான நிபுணர் குழுவின் முதல் கூட்டத்துக்கு மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு இணை அமைச்சர் (தனிப் பொறுப்பு) திரு சந்தோஷ் குமார் கங்க்வார் தலைமை தாங்கினார்.

 

கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் கவுரவ பேராசிரியர் எஸ் பி முகர்ஜி தலைமையிலான இந்தக் குழுவில் புகழ்பெற்ற பொருளாதார நிபுணர்கள், புள்ளியிலாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் இடம்பெற்றுள்ளனர்.

 

இடம் பெயர்தல், தொழில்முறை அமைப்புகள், வீட்டுப் பணியாளர்கள் தொடர்பான ஆய்வுகள் மற்றும் இதர ஆய்வுகளில் தொழிலாளர் அலுவலகத்துக்கு தொழில்நுட்ப வழிகாட்டுதலை வழங்குவதற்காக மூன்றாண்டு காலத்துக்கு இந்தக் குழு அரசால் அமைக்கப்பட்டுள்ளது.

 

கூட்டத்தில் பேசிய அமைச்சர், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் குறித்த நம்பகமான தரவுகள் தேவை என்று கூறினார்.

குறிப்பாக கொவிட்-19-இன் போது அவர்கள் எதிர்கொண்ட பிரச்சினைகள் பற்றிய நம்பகத்தகுந்த விவரங்கள் தேவை என்று அவர் தெரிவித்தார்.

 

சிறப்பு தொழிலாளர் பிரிவுகள் தொடர்புடைய பிரச்சினைகளைப் பற்றி புரிந்து கொள்வதற்காக மூன்று ஆய்வுகளை நடத்துமாறு தொழிலாளர் அலுவலகத்துக்கு அரசு உத்தவிட்டுள்ளதாக திரு கங்க்வார் மேலும் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்தி குறிப்பை பார்க்கவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1663173 

----- 



(Release ID: 1663257) Visitor Counter : 254