நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்

நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகத்தில் திரு ராம் விலாஸ் பஸ்வானுக்கு இரங்கல் கூட்டம் நடைபெற்றது

Posted On: 09 OCT 2020 5:26PM by PIB Chennai

நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகத்தின் அலுவலர்கள்/பணியாளர்கள்மத்திய அமைச்சர் திரு திரு ராம் விலாஸ் பஸ்வானின் மறைவுக்கு கிரிஷி பவனில் இன்று நடைபெற்ற கூட்டமொன்றில் இரங்கல் தெரிவித்தனர்.

 

நுகர்வோர் விவகாரங்கள் செயலாளர் திருமதி லீனா டாண்டன், உணவு மற்றும் பொது விநியோக செயலாளர் திரு சுதான்ஷு பாண்டே மற்றும் அமைச்சகத்தின் அனைத்து மூத்த அதிகாரிகளும் இரங்கல் கூட்டத்தில் கலந்து கொண்டு நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சராக திரு ராம் விலாஸ் பஸ்வானின் பங்களிப்பை நினைவு கூர்ந்தனர். அவரது ஆன்மாவுக்காக பிரார்த்தனை செய்த அனைத்து அதிகாரிகளும், அவரது குடும்பத்துக்கு இரங்கல்களை தெரிவித்தனர்.

 

மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சர் திரு ராம் விலாஸ் பஸ்வான் புது தில்லியில் நேற்று (2020 அக்டோபர் 8) காலமானார்.

--- 



(Release ID: 1663248) Visitor Counter : 96