தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்

ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 9 அன்று கொண்டாடப்படும் உலக தபால் தினத்தில் இருந்து ஆரம்பிக்கும் தேசிய தபால் வார கொண்டாட்டங்களை இந்தியா போஸ்ட் இன்று தொடங்கியது

Posted On: 09 OCT 2020 5:24PM by PIB Chennai

1874-ஆம் ஆண்டு பெர்னில் சர்வதேச தபால் சங்கம் தொடங்கியதை நினைவு கூறும் வகையில் இது கொண்டாடப்படுகிறது. மக்கள் மற்றும் தொழில்களின் அன்றாட செயல்பாடுகளில் தபால் துறை ஆற்றும் பங்கு, நாடுகளின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியில் அதன் பங்களிப்பு ஆகியவை குறித்த விழிப்புணர்வை உருவாக்குவதே உலக தபால் தினத்தின் நோக்கமாகும்.

இதற்கு ஒரு படி மேலே சென்று, இந்திய தபால் துறை இதை வாரம் முழுக்க கொண்டாடுகிறது. தபால் சேவைகளைப் பற்றிய விழிப்புணர்வை தேசிய அளவில் ஏற்படுத்துவதற்காக பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் செயல்பாடுகளை தபால் துறை நடத்துகிறது.

இந்த ஆண்டு, அக்டோபர் 9 உலக தபால் தினமாகவும், அக்டோபர் 10 வங்கியியல் தினமாகவும், அக்டோபர் 12 தபால் ஆயுள் காப்பீட்டு தினமாகவும், அக்டோபர் 13 தபால் வில்லைகள் சேகரிப்பு தினமாகவும், அக்டோபர் 14 தொழில் வளர்ச்சி தினமாகவும், அக்டோபர் 15 கடிதங்கள் தினமாகவும் கொண்டடப்படுகின்றன.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்தி குறிப்பை படிக்கவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1663170

----- 


(Release ID: 1663246) Visitor Counter : 169