அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

அறிவியல் தொழில்நுட்பத் துறையும் ஐபிஎம் நிறுவனமும் இணைந்து மாணவிகளுக்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதத்தில் வேலைவாய்ப்பு வழங்க நடவடிக்கை

அறிவியல் தொழில்நுட்பத்தின் விக்யான் ஜோதி மற்றும் 'அறிவியலுடன் ஈடுபடு' (விக்யான் பிரசார்) திட்டங்கள் ஒருங்கிணைப்பு

'அறிவியலுடன் ஈடுபடு' என்ற தளத்தின் மூலம் நாட்டின் இளைஞர்கள் தரமான அறிவியல் சார்ந்த விஷயங்களை கற்றுக்கொள்ள முடியும்: பேராசிரியர் அஷுடோஷ் ஷர்மா, செயலாளர், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

Posted On: 09 OCT 2020 4:10PM by PIB Chennai

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின்  விக்யான் ஜோதி மற்றும் 'அறிவியலுடன் ஈடுபடு' (விக்யான் பிரசார்) ஆகிய திட்டங்களை மேம்படுத்த இந்தத் துறையும், ஐபிஎம் இந்தியா நிறுவனமும் இணைந்துள்ளன.

விக்யான் ஜோதி திட்டத்தின் கீழ் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதப் பிரிவில் மாணவிகளுக்கு வேலைவாய்ப்பு அதிகரிக்கப்படும். 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகள் தலைச் சிறந்த கல்லூரிகளில் தங்கள் மேற்படிப்பைத் தொடர இந்த திட்டம் உதவிகரமாக இருக்கும்.

விக்யான் பிரசார் அல்லது 'அறிவியலுடன் ஈடுபடு' என்ற திட்டத்தின் கீழ் மாணவர்கள், ஆசிரியர்கள், விஞ்ஞானிகள் ஆகியோரை இணைத்து உயர்நிலைப் பள்ளிக்கும் இதர கல்வி மையங்களுக்குமான தொடர்பு வலுப்படுத்தப்படும்.

இந்தத் திட்டங்கள் குறித்து பேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைச் செயலாளர் பேராசிரியர் அஷுடோஷ் ஷர்மா, அறிவியலில் ஈடுபாடு உள்ள பள்ளி மாணவர்களுக்கு அதுகுறித்தத் தரமான விஷயங்கள் கற்றுத் தரப்படும் என்றார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1663120

----- 


(Release ID: 1663212) Visitor Counter : 267