வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்

32 அம்ருத் திட்டங்கள் நிறைவடைந்துள்ளன- 41 திட்டங்கள் இமாச்சலப் பிரதேசத்தில் செயல்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன

இடுகை இடப்பட்ட நாள்: 09 OCT 2020 12:51PM by PIB Chennai

இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களின் தலைமை செயலாளர்கள் / முதன்மை செயலாளர்கள்/ மூத்த அதிகாரிகளோடு கடந்த மாதம் உரையாடிய மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சக செயலாளர் திரு துர்கா சங்கர் மிஷ்ரா, அம்ருத் திட்டத்தின் கீழ் இந்த மாநிலங்கள் அடைந்துள்ள முன்னேற்றத்துக்கு பாராட்டு தெரிவித்தார்.

இந்த திட்டங்களின் பலன்கள் மக்களை குறித்த நேரத்தில் சென்றடைவதற்காக இவற்றை விரைந்து செயல்படுத்துமாறு அவர்களை திரு மிஷ்ரா கேட்டுக்கொண்டார்.

இந்த இரண்டு மலை மாநிலங்களுக்கு வழங்கப்படும் மத்திய நிதி உதவியான 90 சதவீதத்தை பெறுவதற்குநீட்டிக்கப்பட்ட கடைசி தேதியான 2021 மார்ச் 31க்குள் அனைத்து திட்டங்களையும் முடிக்குமாறு இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் அதிகாரிகளை அவர் கேட்டுக்கொண்டார்.

உரையாடல்களின் போது, இமாச்சலப் பிரதேசத்தில் 32 அம்ருத் திட்டங்கள் நிறைவடைந்துள்ளன என்றும் 41 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்றும் அவருக்கு தெரிவிக்கப்பட்டது.

உத்தரகாண்டில் ரூபாய் 593 கோடியில் செயல்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் 151 திட்டங்களில் 47 நிறைவடைந்துள்ளன.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்தி குறிப்பை படிக்கவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1662997

----- 


(வெளியீட்டு அடையாள எண்: 1663171) வருகையாளர் எண்ணிக்கை : 268
இந்த வெளியீட்டை படிக்க: English , हिन्दी , Urdu , Manipuri , Bengali , Assamese , Telugu