ஆயுஷ்

யோகாவை விரும்புவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் செய்தி ஒன்று உள்ளது. கியூபாவில் யோகா பிரபலம் அடைந்து வருவது தான் அது

Posted On: 09 OCT 2020 12:55PM by PIB Chennai

யோகாவை விரும்புவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் செய்தி ஒன்று உள்ளது. கியூபாவில் யோகா பிரபலம் அடைந்து வருவது தான் அது.

நமது முன்னோர்கள் நமக்கு விட்டுச் சென்ற காலத்தை கடந்த பொக்கிஷமான யோகா தற்போது உலகெங்கும் விரும்பப்படுகிறது.

கியூபாவின் ஹவானாவில் உள்ள இந்திய தூதரகத்திற்கு கிடைத்துள்ள தகவல்களின் படி, கியூபாவின் யோகா சங்கத்தின் நிறுவனரும் தலைவருமான பேராசிரியர் எடுவார்டோ பிமெண்டல் வாஸ்குவேஸ், யோகாவில் அந்த நாட்டின் முன்னணி நபராக திகழ்கிறார்.

கடந்த 30 வருடங்களாக யோகாவை கற்றுத்தரும் அவர், 50 பயிற்சியாளர்களுக்கு பயிற்சி அளித்திருக்கிறார். 1.13 கோடி மக்கள் தொகை உள்ள கியூபா நாட்டில் இது ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாகும்.

சர்வதேச யோகா தினம் ஒவ்வொரு வருடமும் கியூபாவில் உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. இந்த வருடம் கூட ஆறாவது சர்வதேச யோகா தினம் கியூபாவில் உள்ள இந்திய தூதரகத்தின் பங்களிப்போடு கொண்டாடப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்தி குறிப்பை படிக்கவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1663000

                                                                                        ---- 



(Release ID: 1663166) Visitor Counter : 186