அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

சமுதாய அளவிலான தண்ணீர் சுத்திகரிப்பு அமைப்புக்கான தொழில்நுட்பத்தை சிஎஸ்ஐஆர்-சிஎம்இஆர்ஐ பகிர்ந்து கொண்டது

प्रविष्टि तिथि: 08 OCT 2020 6:54PM by PIB Chennai

மேற்கு வங்க மாநிலம் ஹவுராவை சேர்ந்த திருவாளர்கள் கேப்ரிகார்ன் அக்வா பிரைவேட் லிமிடெட் என்னும் நிறுவனத்துடன் சமுதாய அளவிலான தண்ணீர் சுத்திகரிப்பு அமைப்புக்கான தொழில்நுட்பத்தை சிஎஸ்ஐஆர்-சிஎம்இஆர்ஐ இன்று பகிர்ந்து கொண்டது.

 

சிஎஸ்ஐஆர்-சிஎம்இஆர்ஐ, துர்காப்பூர், இயக்குநர், பேராசிரியர் (டாக்டர்) ஹரிஷ் ஹிராணியின் முன்னிலையில் மெய்நிகர் தளம் ஒன்றின் மூலம் இந்த தொழில்நுட்ப பகிர்வு நடைபெற்றது.

 

நிகழ்ச்சியில் பேசிய பேராசிரியர் ஹிராணி, "எளிதில் கிடைக்கும் பொருட்களான மணல், ஜல்லி ஆகியவற்றை கொண்டு செயல்படும் இந்த அமைப்பு ஒரு மணி நேரத்திற்கு 10 ஆயிரம் லிட்டர் தண்ணீரை சுத்திகரிக்கும் திறனோடு செயல்படும்," என்றார்.

 

மேலும் பேசிய அவர், மூன்று கட்டங்களாக தண்ணீரை சுத்திகரிக்கும் இந்த அமைப்பு, அனுமதிக்கப்பட்ட அளவுகளில் தண்ணீரைச் சுத்திகரிப்பதாக தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்தி குறிப்பை படிக்கவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1662808

----- 


(रिलीज़ आईडी: 1662890) आगंतुक पटल : 180
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , हिन्दी , Manipuri , Punjabi , Telugu