உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம்

2020 மே 6-இல் இருந்து 20 லட்சத்துக்கும் அதிகமானோர் வெளிநாடுகளில் இருந்து வந்துள்ளார்கள் அல்லது சர்வதேச பயணம் மேற்கொண்டுள்ளார்கள்: திரு ஹர்தீப் சிங் புரி

Posted On: 08 OCT 2020 6:10PM by PIB Chennai

2020 மே 6-இல் இருந்து 20 லட்சத்துக்கும் அதிகமானோர் வெளிநாடுகளில் இருந்து இந்தியா வருவதற்கோ அல்லது சர்வதேச பயணம் மேற்கொள்ளவோ பல்வேறு வழிகளின் மூலம் இந்திய அரசு வசதி ஏற்படுத்தி கொடுத்திருக்கிறது என்று மத்திய விமான போக்குவரத்து இணை அமைச்சர் (தனிப் பொறுப்பு) திரு ஹர்தீப் சிங் புரி இன்று தெரிவித்தார்.

புது தில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வந்தே பாரத் இயக்கத்தின் கீழ் 17,11,128 நபர்கள் இந்தியா திரும்பி உள்ளார்கள் என்றும், 2,97,536 நபர்கள் இந்தியாவை விட்டு வெளியே சென்றுள்ளார்கள் என்றும் கூறினார்.

சர்வதேச பயணங்களைப் பற்றி குறிப்பிட்ட அவர், அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து, மாலத்தீவுகள், ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், ஆப்கானிஸ்தான், பக்ரைன், ஜப்பான், நைஜீரியா, கென்யா, ஈராக், பூட்டான் மற்றும் ஓமன் ஆகிய 16 நாடுகளுடன் காற்று குமிழி ஒப்பந்தங்களை இந்தியா செய்துகொண்டுள்ளதாக திரு புரி தெரிவித்தார்.

33 சதவீத பயணிகளுடன் தொடக்கத்தில் ஆரம்பித்த உள்ளூர் விமான பயண சேவைகள், பின்னர் 45%, 60% என்று படிப்படியாக அதிகரித்ததாக அமைச்சர் கூறினார்.

2020 மே 25-இல் இருந்து 1.2 கோடிக்கும் அதிகமான உள்நாட்டு பயணிகள் பயணித்துள்ளதாக தெரிவித்த அவர், இன்று மட்டும் 1525 விமானங்களில் 1,56,565 நபர்கள் பயணம் மேற்கொண்டதாக கூறினார்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்தி குறிப்பை படிக்கவும்:https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1662791

---- 



(Release ID: 1662888) Visitor Counter : 145