சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
'மனநலம்: கொவிட்-19க்கும் அப்பால்' என்ற சர்வதேசக் கருத்தரங்கை மத்திய அமைச்சர் திரு தாவர்சந்த் கெலாட் தொடங்கி வைத்தார்
प्रविष्टि तिथि:
08 OCT 2020 5:13PM by PIB Chennai
மனநலம்: கொவிட்-19க்கும் அப்பால்' என்ற சர்வதேசக் கருத்தரங்கை காணொலிக் காட்சி வாயிலாக மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர் திரு தாவர்சந்த் கெலாட் தொடங்கி வைத்தார். ஆஸ்திரேலியா-இந்தியா நிறுவனத் தலைவர் பேராசிரியர் கிரேக் ஜெப்ரி உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், உலகளவில் மன நலன் குறித்த பாதிப்புகள் அதிகரித்து வருவதாகக் கூறினார். இது போன்ற பிரச்சினைகளைத் தீர்க்க, மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் பல்கலைக்கழகத்துடன், மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டுத் துறையும், சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகமும் இணைந்து இந்த கருத்தரங்கை ஏற்பாடு செய்திருந்தது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1662757
----
(रिलीज़ आईडी: 1662813)
आगंतुक पटल : 215