பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்

அரசு ஊழியர்கள் விமானம் மூலமாக ஜம்மு கஷ்மிர், லடாக், வட கிழக்கு மாகாணம் மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு பயணம் செய்ய எல்டிசி விடுமுறை சுற்றுப் பயணச் சலுகையை பணியாளர் நலன் மற்றும் பயிற்சித்துறை தளர்த்தியுள்ளது

இந்தப் பயணச் சலுகை 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 25 வரை நீட்டிப்பு- டாக்டர் ஜிதேந்திர சிங்

அரசு ஊழியர்கள் சொந்த ஊர்களுக்கான எல் டி சி விடுமுறை சுற்றுப்பயணத்திற்குப் பதிலாக இந்த சலுகையைப் பெற்றுக்கொள்ளலாம்

ஊழியர்கள் தங்கள் வசதிக்கேற்ப தனியார் விமானத்திலும் இந்த இடங்களுக்குச் செல்லலாம்

Posted On: 08 OCT 2020 5:10PM by PIB Chennai

அரசு ஊழியர்கள், விமானம் மூலமாக ஜம்மு கஷ்மிர், லடாக், வட கிழக்கு மாகாணம் மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்குப் பயணம் செய்ய,எல்டிசி விடுமுறை சுற்றுப் பயண சலுகையை தளர்த்தி பணியாளர் நலன் மற்றும் பயிற்சித் துறை உத்தரவிட்டுள்ளது. இந்த தளர்வு 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 25 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளதாக மத்திய பணியாளர் நலன் பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியர்களுக்கான அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பின் மூலம், அரசு ஊழியர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கான எல் டி சி விடுமுறை சுற்றுப்பயணத்திற்குப் பதிலாக இந்த சலுகையைப் பயன்படுத்தலாம். மேலும் அரசு ஊழியர்கள் ஏர் இந்தியா விமானம் மூலம் மட்டுமே பயணம் செய்ய வேண்டும் என்று இருந்த கட்டுப்பாடு தளர்த்தப்பட்டு தனியார் விமானங்களிலும் அவர்கள் பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீர், லடாக், வடகிழக்கு மாகாணம் மற்றும் அந்தமான் நிக்கோபாரை சொந்த ஊராகக் கொண்ட அரசு ஊழியர்கள் இதனால் பெருமளவில் பயனடைவார்கள் என்று அமைச்சர் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்தி குறிப்பு ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1662753

----



(Release ID: 1662806) Visitor Counter : 195