சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்

வடகிழக்கு மாநிலங்களில் சாலை மேம்பாட்டு திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு 2 மடங்கு அதிகரிப்பு

Posted On: 08 OCT 2020 12:39PM by PIB Chennai

வடகிழக்கு பகுதிகளில் சிறப்பு துரித சாலை மேம்பாட்டு திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடை  இந்த நிதியாண்டில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் கிட்டதட்ட 2 மடங்காக உயர்த்தியுள்ளது.

வடகிழக்கு மாநிலங்களில் சாலைகள் அமைக்க,  2020-21ம் நிதியாண்டுக்கு முன்பு ரூ.390 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. தற்போது இதே காலத்துக்கு இந்த தொகை  ரூ.760 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இதில் ரூ.300 கோடி, அருணாச்சலப் பிரதேசத்தில் சாலைகளை மேம்படுத்தும் திட்டத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பகுதிகளில் சிறப்பு துரித சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ், சாலை மேம்பாட்டு திட்டங்களை மத்திய அரசு மிகப் பெரிய அளவில் மேற்கொண்டு வருகிறதுமுதல் கட்டமாக 6416 கி.மீ தூரத்துக்கு ரூ.30,450 கோடி செலவில் சாலைகள்  அமைக்க முடிவு செய்யப்பட்டது. இவற்றில் 3356 கி.மீ தூரத்துக்கு சாலைகள் அமைக்கும் பணி முடிவடைந்துள்ளது. 1961 கி.மீ தூரத்துக்கு சாலைகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்தி குறிப்பை படிக்கவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1662655

******

(Release ID: 1662655)



(Release ID: 1662713) Visitor Counter : 131