ஆயுஷ்

ஆயுர்வேத ஆராய்ச்சிக்காக அமிட்டி பல்கலைக்கழகத்துடன், அகில இந்திய ஆயுர்வே மையம் புரிந்துணர்வு ஒப்பந்தம்

Posted On: 08 OCT 2020 12:08PM by PIB Chennai

சுகாதாரத்துறையில் ஆயுர்வேத முறைகளை மேம்படுத்த கூட்டு முயற்சியை ஏற்படுத்த வேண்டும் என்ற ஆயுஸ் அமைச்சகத்தின் கொள்கைப்படிதில்லியில் உள்ள அகில இந்திய ஆயுர்வேத மையம், அமிட்டி பல்கலைக்கழகத்துடன்  2020, அக்டோபர் 7ம் தேதி புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டது. ஆயுர்வே அறிவியல் ஆராய்ச்சியை மேம்படுத்துவதில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கவனம் செலுத்துகிறது

ஆயுர்வேத மருந்துகளின் தரம், இயற்கை ரசாயணம் மற்றும் மருந்தில் பிச்.டி படிப்புகள்  ஆகியவற்றில் கூட்டாக செயல்பட இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் வழிவகுக்கிறது. இந்த கூட்டு முயற்சியில் மருந்துகள்  பற்றிய ஆய்வு சாதகமான பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனகூட்டு திட்டங்கள் மற்றும் ஆராய்ச்சி கட்டுரை வெளியீடுகளுக்கும் இந்த புரிந்துணைர்வு ஒப்பந்தம் வழிவகுக்கும்.

இந்த கூட்டு செயல்பாடுஆயுர்வேதத்தில் சில அதிநவீன ஆராய்ச்சிகளுக்கும், உலகெங்கிலும் உள்ள ஆயுர்வேத அறிவியலுடன் தொடர்புடைய அறிவை மேம்படுத்துவதற்கும், பரப்புவதற்கும் வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

தற்போதைய தொற்று சூழ்நிலையில், இந்திய மருத்துவ முறையை, உலகளவில் அறிமுகம் செய்வதில் ஆயுஷ் அமைச்சகம் முக்கிய பங்காற்றி வருகிறது.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்தி குறிப்பை படிக்கவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1662640

******

(Release ID: 1662640)


(Release ID: 1662701) Visitor Counter : 210