தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
நிரந்த ஊனம் ஏற்பட்ட 85 தொழிலாளர்களுக்கு பணப் பலன்களை அளிக்கும் பணி தொடக்கம்: இஎஸ்ஐசி தகவல்
Posted On:
08 OCT 2020 11:25AM by PIB Chennai
கொவிட்-19 தொற்றை கருத்தில் கொண்டு, நிரந்தர ஊனம் ஏற்பட்ட தொழிலாளிகள் மற்றும் உயிரிழந்த தொழிலாளிகளின் குடும்பத்தினருக்கு பணப் பயன்களை விரைவில் வழங்கம்படி கிளை அலுவலகங்களுக்கு இஎஸ்ஐசி ஒவ்வொரு மாதமும் உத்தரவுகள் பிறப்பிக்கிறது. இதன்படி அனைத்து மண்டலங்களிலும் உள்ள இஎஸ்ஐசி அலுவலகங்கள் பணப் பயன்களை சம்பந்தப்பட்டவர்களுக்கு ஒரு மாதத்துக்குள் வழங்கப்பட்டு வருகிறது.
ராஜஸ்தானின் பிண்டாவாடா மாவட்டத்தில் தொழில் ரீதியாக ஏற்படும் நுரையீரல் நோய்களால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு பரிசோதனை செய்ய ஜெய்ப்பூர் மாதிரி மருத்துவமனையில் மருத்துவ வாரியம் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த மருத்துவ வாரியத்தின் முடிவுப்படி, நிரந்தர ஊனம் ஏற்பட்டவர்களாக அறிவிக்கப்பட்ட 85 தொழிலாளர்களுக்கு பணப் பயன்களை அளிக்கும் நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன. நுரையீரல் நோய்கள் காரணமாக இறந்த 6 தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கும் பண பயன்களை வழங்கும் நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன என இஎஸ்ஐசி தெரிவித்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்தி குறிப்பை படிக்கவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1662622
******
(Release ID: 1662622)
(Release ID: 1662685)
Visitor Counter : 224