ரெயில்வே அமைச்சகம்
பொது- தனியார் கூட்டு முயற்சியில் பயணிகள் ரயிலை இயக்குவதற்கு விருப்பம் தெரிவித்திருந்த தகுதி சார் விண்ணப்பங்கள் இன்று பரிசீலனைக்கு ஏற்பு
ரயில்வே அமைச்சகத்தின் இந்த முயற்சிக்கு பெரும் வரவேற்பு
மொத்தம் உள்ள 12 பிரிவுகளுக்கு 15 நிறுவனங்களிடம் இருந்து 120 விண்ணப்பங்கள் வந்து சேர்ந்துள்ளன
प्रविष्टि तिथि:
07 OCT 2020 6:15PM by PIB Chennai
பொது- தனியார் கூட்டு முயற்சியில் பயணிகள் ரயிலை இயக்குவதற்கு விருப்பம் தெரிவித்திருந்து அனுப்பப்பட்டிருந்த தகுதி சார் விண்ணப்பங்களை இந்திய ரயில்வே இன்று பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டது.
ரயில்வே அமைச்சகத்தின் இந்த அறிவிப்புக்கு சிறப்பான வரவேற்பு கிடைக்கப் பெற்றுள்ளது. மொத்தம் உள்ள 12 பிரிவுகளுக்கு, 15 நிறுவனங்களிடமிருந்து 120 விண்ணப்பங்கள் வந்து சேர்ந்துள்ளன.
நாடெங்கிலும் ரயில் சேவையின் தரத்தை மேம்படுத்த 151 ரயில்களில், பொது- தனியார் கூட்டு முயற்சியில் பயணிகள் ரயிலை இயக்கும் திட்டம் செயல்படுத்தப்படுத்தப்படவிருப்பதாக ரயில்வே அமைச்சகம் அறிவித்திருந்தது.
இந்தத் திட்டத்தில் இணையும் தனியார் நிறுவனங்கள், 30 ஆயிரம் கோடி ரூபய் வரை முதலீடு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1662393
-----
(रिलीज़ आईडी: 1662569)
आगंतुक पटल : 218