இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
பயிற்சி மற்றும் போட்டிக்காக இத்தாலி, பிரான்சுக்கு இந்திய ஆண் மற்றும் பெண் குத்து சண்டை வீரர்கள் பயணம்
Posted On:
07 OCT 2020 5:47PM by PIB Chennai
அயல்நாட்டு பயிற்சி மற்றும் போட்டிக்காக அக்டோபர் முதல் டிசம்பர் வரை இந்தியாவின் தலைசிறந்த ஆண் மற்றும் பெண் குத்து சண்டை வீரர்கள் இத்தாலி மற்றும் பிரான்சுக்கு பயணம் மேற்கொள்ள இருக்கிறார்கள்.
ரூ1.31 கோடி மதிப்புடைய இந்தப் பயிற்சி மற்றும் அனுபவத்துக்கு அரசால் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. பத்து வீரர்கள் மற்றும் ஆறு வீராங்கனைகள் உட்பட 28 நபர்கள் கொண்ட இந்தக் குழுவில், அமித் பங்கால், ஆசிஷ் குமார், சதிஷ் குமார், சிம்ரன்ஜித் கவுர், லோவ்லினா பொர்கொஹைன் மற்றும் பூஜா ராணி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இவர்கள் அனைவருமே டோக்யோ ஒலிம்பிக் போட்டிகளுக்கான ஒதுக்கீட்டை பெற்றிருக்கிறார்கள். எட்டு பயிற்சியாளர்கள் மற்றும் உதவி பணியாளர்கள் ஆண்கள் அணியிலும், நான்கு பயிற்சியாளர்கள் மற்றும் உதவி பணியாளர்கள் பெண்கள் அணியிலும் இருப்பார்கள்.
இந்த பயிற்சி குறித்து மகிழ்ச்சி தெரிவித்த ஆசிஷ் குமார், இது ஒரு நல்ல வாய்ப்பென்றும், ஒலிம்பிக்கில் எதிர்கொள்ளக்கூடியவர்களோடு தாங்கள் பயிற்சி மேற்கொள்ளலாம் என்றும் தெரிவித்தார். "புதிய போட்டியாளர்களை எதிர்கொள்ளும் போது, எங்களின் திறமையை குறித்து நாங்கள் அறிந்து கொள்ள முடியும்," என்று அவர் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்தி குறிப்பை படிக்கவும்:https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1662374
----
(Release ID: 1662568)
Visitor Counter : 123