பாதுகாப்பு அமைச்சகம்

ஏரோ இந்தியா 2021 குறித்து பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் தலைமையில் வெளிநாட்டு தூதர்களுடன் காணொலி காட்சி வாயிலாக வட்டமேஜை மாநாடு

ஆசியாவின் பிரமாண்ட ஏரோ ஷோவில் கலந்து கொள்ள இந்தியா வருமாறு அமைச்சர் அழைப்பு

Posted On: 07 OCT 2020 5:54PM by PIB Chennai

2021ல் நடைபெற உள்ள ஏரோ இந்தியா என்னும் நிகழ்ச்சி குறித்து இன்று தூதர்களுடன் காணொலி காட்சி வாயிலாக நடைபெற்ற வட்டமேஜை மாநாட்டிற்கு பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் தலைமை தாங்கினார். பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ராணுவத் தளவாட உற்பத்தித் துறை இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. வரும் 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி 3 முதல் 7 ஆம் தேதி வரை பெங்களூருவில் நடைபெற உள்ள பதிமூன்றாவது ஏரோஷோ குறித்து சுமார் 75 நாடுகளைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட தூதர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர்.

 

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், பாதுகாப்புத் துறையில் தலைசிறந்த 5 நாடுகளின் பட்டியலில் இந்தியா இடம் பெற்று தன்னிறைவை அடைய இந்த ஏரோஷோ உதவியாக இருக்கும் என்று கூறினார். பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பாதுகாப்புத்துறை பிரதிநிதிகள்  இந்த மாநாட்டில் கலந்துகொள்ள இந்தியா வர வேண்டும் என்று அப்போது அவர் அழைப்பு விடுத்தார்.

 பிரதமரின் ஆத்ம நிர்பார் பாரத் திட்டத்தை செயல்படுத்தும் வகையில் பாதுகாப்புத் துறையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் மேலும் கூறினார்.

நிகழ்ச்சியில் பேசிய கர்நாடக முதலமைச்சர் திரு பி எஸ் எடியூரப்பா, மாநாட்டிற்குத் தேவையான அனைத்து பாதுகாப்பு வழிமுறைகளும் பின்பற்றப்படும் என்று உறுதியளித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1662377

----- 


(Release ID: 1662567) Visitor Counter : 168