இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்

இந்திய ஆக்கி அணிகளுக்கான பயிற்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது

Posted On: 06 OCT 2020 6:35PM by PIB Chennai

கொவிட்-19 பெருந்தொற்று காரணமாக அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்கத்தால் நிறுத்தப்பட்டிருந்த இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகளுக்கான ஆக்கி பயிற்சி பெங்களூருவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தெற்கு மையத்தில் மீண்டும் தொடங்கியுள்ளது.

இந்திய ஆக்கி அணிகளுக்கான பயிற்சி நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், இது முழு வீச்சை விரைவில் எட்டும் என்று அணி தலைவர்களும், பயிற்சியாளரும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்கள்.

அணியின் தலைவர் மன்பிரீத் சிங் உட்பட முகாமுக்கு வந்த ஆறு வீரர்களுக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் இந்திய விளையாட்டு ஆணைய மையத்திலும் மருத்துவமனையிலும் அளிக்கப்பட்ட நிலையில் அவர்கள் தற்போது மீண்டும் பயிற்சிக்கு திரும்பியுள்ளனர்.

"நான் பயிற்சிக்கு திரும்பிய போது எனக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டது. தற்போது நாங்கள் மீண்டும் பயிற்சியில் இணைந்துள்ளோம். நாங்கள் படிப்படியாக பழைய நிலைமைக்கு திரும்புவதற்கான திட்டத்தை பயிற்சியாளர்கள் வகுத்துள்ளனர்  விரைவில் பயிற்சி முழு வீச்சை எட்டும் என்று எனக்கு மிகுந்த நம்பிக்கை இருக்கிறது," என்று மன்பிரீத் கூறியுள்ளார்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்தி குறிப்பை படிக்கவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1662089

------ 


(Release ID: 1662140) Visitor Counter : 186