இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்

உத்தரப்பிரதேசத்தின் குத்துச்சண்டை வீரர் திரு சுனில் சவுகான் மற்றும் வில்வித்தை வீரர் நீரஜ் சவுகானுக்கு ரூபாய் ஐந்து லட்சம் உதவித் தொகையை அறிவித்தார் விளையாட்டு துறை அமைச்சர் திரு கிரண் ரிஜிஜு

Posted On: 06 OCT 2020 6:17PM by PIB Chennai

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த குத்துச் சண்டை வீரர் திரு சுனில் சவுகான். அவரது சகோதரர் வில்வித்தை வீரர் நீரஜ்  சவுகான் ஆவார். கொரோனாவினால் ஏற்பட்ட ஊரடங்கினால் இவர்களது தந்தை வேலையை இழந்து காய்கறி விற்க நேர்ந்தது. இவர்களுக்கு உதவ விளையாட்டு துறை அமைச்சகம் முன்வந்துள்ளது.

இந்த சகோதரர்களுக்கு, பண்டித தீனதயாள உபாத்தியாயா தேசிய விளையாட்டு வீரர்கள் நல நிதியிலிருந்து ரூபாய் 5 லட்சத்தை  வழங்க மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் திரு கிரண் ரிஜிஜூ உத்தரவிட்டுள்ளார்.

வில்வித்தை வீரரான திரு நீரஜ் சவுகான், 2018 ல் நடந்த சீனியர் வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியின் 50 மீட்டர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். திரு சுனில் சவுகான், 2020 கேலோ இந்திய பல்கலைக்கழக விளையாட்டில் குத்துச்சண்டை பிரிவில் தங்கப் பதக்கத்தை வென்றார்.

இது போன்று நிதி உதவி தேவைப்படும் விளையாட்டு வீரர்கள் விளையாட்டு அமைச்சகத்தின் இணைய தளத்திலோ அல்லது கீழுள்ள மின் அஞ்சலில் தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம்: myasoffice[at]gmail[dot]com

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1662080

----- 



(Release ID: 1662128) Visitor Counter : 118