வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

தேசிய ஸ்டார்ட் அப் விருதுகள் 2020-இன் முடிவுகள் அறிவிப்பு

Posted On: 06 OCT 2020 6:11PM by PIB Chennai

தேசிய ஸ்டார்ட் அப் விருதுகள் 2020-இன் முடிவுகளை ரயில்வே, தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் திரு பியூஷ் கோயல் இன்று அறிவித்தார்.

மத்திய தொழில் மற்றும் வர்த்தகம் இணை அமைச்சர் திரு சோம் பர்காஷ் முன்னிலையில் மெய்நிகர் பாராட்டு விழா நடைபெற்றது.

புதுமையான பொருட்கள் அல்லது தீர்வுகளை உருவாக்கும் புது நிறுவனங்களை ஊக்கப்படுத்துவதற்காக தேசிய ஸ்டார்ட் அப் விருதுகளை மத்திய தொழில் ஊக்குவிப்பு மற்றும் உள்நாட்டு வர்த்தகத் துறை முதன்முறையாக உருவாக்கியுள்ளது.

முதலீட்டாளர்களுக்கு புது நிறுவனங்கள் வழங்கிய லாபத்தை மட்டுமே கருத்தில் கொள்ளாமல், சமூக நலனுக்கான பொருட்களுக்கும் தேவைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

12 துறைகளில் உள்ள 35 பிரிவுகளில் இந்த விருதுகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப் பட்டிருந்தது. வேளாண்மை, கல்வி, தொழில் முனைவு தொழில்நுட்பம், எரிசக்தி, நிதி, உணவு, சுகாதாரம், தொழில்கள் 4.0, விண்வெளி, பாதுகாப்பு, சுற்றுலா மற்றும் நகர்ப்புற சேவைகள் ஆகியவை இந்த துறைகளாகும்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்தி குறிப்பை படிக்கவும்:https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1662079

                                                 ------


(Release ID: 1662112) Visitor Counter : 320