சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
உலக சுகாதார நிறுவன நிர்வாக வாரியத்தின் 5-வது சிறப்பு கூட்டத்துக்கு டாக்டர்.ஹர்ஷ் வர்தன் தலைமை தாங்கினார்
கொரோனா தொற்றிலிருந்து வெளியேறுவதற்கான ஒரே வழி, ஒட்டு மொத்த உலகத்துக்கும் பொதுவான சிகிச்சை, நோயறிதல் ஆய்வு மற்றும் தடுப்பூசிகள் மட்டுமே ”: உலக சுகாதார நிறுவன கூட்டத்தில் டாக்டர் ஹர்ஷ் வர்தன் பேச்சு
Posted On:
05 OCT 2020 8:35PM by PIB Chennai
உலக சுகாதார நிறுவன செயல் வாரியத்தின் 5வது சிறப்பு கூட்டத்துக்கு, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் காணொலி காட்சி மூலம் தலைமை தாங்கினார். இதில் கண்காணிப்பு பங்குதாரர்கள் மற்றும் உலக சுகாதார நிறுவன தலைமையக அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கொவிட்-19-க்கு எதிரான நடவடிக்கைக்கு, உலக சுகாதார சங்கத்தின் (டபிள்யூ எச் ஏ) 73-வது கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 73.1 தீர்மானத்தின் விதிமுறைகளை முழுமையாக அமல்படுத்துவது குறித்து இந்த கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டது.
‘கொவிட்-19-க்கு எதிரான நடவடிக்கை’ என்ற தலைப்பிலான டபிள் எச் ஏ என்ற தீர்மானத்துக்கு 130 நாடுகள் ஆதரவு அளித்தன . இந்த தீர்மானம், தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளை தீவிரப்படுத்தவும், வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கான அனைத்து அத்தியாவசிய சுகாதார தொழில்நுட்பங்கள் மற்றும் தயாரிப்புகளுக்கு, சமமான அணுகல் மற்றும் நியாயமான விநியோகத்திற்கும் அழைப்பு விடுக்கிறது.
இந்த கூட்டத்தில் கலந்து கொண்டவர்களை டாக்டர் ஹர்ஷ் வர்தன் வரவேற்றார். கொரோனா தொற்றால் உலகம் முழுவதும் பலியானவர்களுக்கு அவர் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார். கொரோனாவை எதிர்த்து போராடும் பணியில், தன்னலமின்றி தொடர்ந்து பாடுபடும் முன்னணி பணியாளர்களுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.
கொரோனா ஏற்படுத்திய உலகளாவிய நெருக்கடியை நினைவு கூர்ந்த டாக்டர் ஹர்ஷ் வர்தன், ‘‘இன்று நாம் அனைவரும் மெய்நிகர் கூட்டம் மூலம் சந்திக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்த அபாயத்தை எதிர்கொள்ள அரசுகள், தொழில் நிறுவனங்கள், மக்கள் சேவை அமைப்புகள் செலவு செய்ய வேண்டும். மேலும், இதற்கான தீர்வுகள் எங்கு ஏற்பட்டாலும், அது அனைவருக்கும் கிடைக்கும் விதித்தில் இருக்க வேண்டும்’’ என்றார்.
அவர் மேலும் கூறுகையில், ‘‘ பேரிடர் அபாயத்தை குறைப்பது மற்றும் மேலாண்மைக்கு உறுதி அளிக்க, விரைவான மற்றும் வெளிப்படையான அடையாளம் காணல், மற்றும் அபாயம் பற்றிய தகவல் தொடர்பு, சுகாதார அமைப்புகளில் முதலீட்டை பராமரிப்பது, பல துறை ஒத்துழைப்பை வலுப்புடுத்துவது, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகளை துரிதப்படுத்துவது , விவேகமான ஆதாரங்கள் அடிப்படையில் திட்டங்களை அமல்படுத்துவது போன்றவை தேவை’’ என குறிப்பிட்டார்.
இது தொடர்பாக, உலக சுகாதார நிறுவனத்தின் உறுப்பினர்கள், உலக சமுதாயத்தினருடன் திறம்பட பணியாற்றி, பொது சுகாதார கடமைகளை ஆற்ற வேண்டும் என டாக்டர் ஹர்ஷ் வர்தன் வலியுறுத்தினார்.
‘‘ தற்போதைய தொற்று போன்ற அனைத்து சவால்கள், பகிரப்பட்ட நடவடிக்கையை கோருகின்றன. ஏனென்றால் பகிரப்பட்ட இந்த அச்சுறுத்தல்களுக்கு, பகிரப்பட்ட நடவடிக்கை தேவை. இந்த பகிரப்பட்ட பொறுப்புதான், உலக சுகாதார நிறுவன கூட்டணியின் தத்துவம்’’ என டாக்டர் ஹர்ஷ் வர்தன் கூறினார்.
கொவிட்-19-க்கு எதிரான நடவடிக்கையில், உலக சுகாதார நிறுவனத்திடம் இருந்து கற்று கொண்ட அனுபவங்கள் மற்றும் பாடங்களை மறு ஆய்வு செய்ய, தற்போதுள்ள வழிமுறைகளை பயன்படுத்துவது பற்றியும், விரிவான மதிப்பீடு செய்வது பற்றியும், உறுப்பு நாடுகளுடன் ஆலோசிக்க வேண்டும் என டாக்டர் ஹர்ஷ் வர்தன் வலியுறுத்தினார்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்தி குறிப்பை படிக்கவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1661847
(Release ID: 1661958)
Visitor Counter : 205