நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்

2020- 21 கரீப் பருவத்தின் சந்தைப்படுத்துதலுக்கு தேவையான பயிர்களை குறைந்தபட்ச ஆதார விலையில் கொள்முதல் செய்வது தொடர்கிறது

அனைத்து மாநிலங்களிலும் நெல் கொள்முதல் சுமூகமாக நடைபெறுகிறது; சில மாநிலங்களில் எண்ணெய் விதை கொள்முதலுக்கு ஒப்புதல்

குறைந்தபட்ச ஆதரவு விலை யில் அவரை விதை மற்றும் கொப்பரையின் கொள்முதலும் துவக்கம்

இடுகை இடப்பட்ட நாள்: 05 OCT 2020 7:30PM by PIB Chennai

2020 21 கரிப் பருவத்திற்கு தேவையான சந்தைப்படுத்துதல் தொடங்கியது. கடந்த காலங்களைப் போலவே இந்த வருடமும் அதே குறைந்தபட்ச ஆதரவு விலை யில் விவசாயிகளிடமிருந்து அரசு பயிர்களை கொள்முதல் செய்கிறது.

2020 21 ஆம் ஆண்டிற்கு நெல் கொள்முதல் செய்யப்படும் மாநிலங்களில், அந்தப் பணி சுமூகமாக நடைபெறுகிறது. அக்டோபர் 4 2020 வரை 8 ஆயிரத்து 389 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 62 ஆயிரத்து 518 விவசாயிகள் பயனடைந்துள்ளனர். இதனால் 1,511.135 கோடி ரூபாய் குறைந்தபட்ச ஆதரவு விலையாக அரசுக்கு செலவாகியுள்ளது.

மேலும் மாநிலங்களின் கோரிக்கையின்படி, தமிழ்நாடு கர்நாடகா,மகாராஷ்டிரா, குஜராத் ஹரியானா மாநிலங்களுக்கு 28.40 லட்சம் மெட்ரிக் டன் பருப்பும், எண்ணெய் விதைகளும் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. இதேபோல் ஆந்திர பிரதேசம், கர்நாடகா, தமிழ்நாடு, மற்றும் கேரளா மாநிலங்களுக்கு 1.23 லட்சம் மெட்ரிக் டன் கொப்பரை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1661818

**********************


(வெளியீட்டு அடையாள எண்: 1661895) வருகையாளர் எண்ணிக்கை : 211
இந்த வெளியீட்டை படிக்க: Assamese , हिन्दी , English , Urdu , Punjabi , Telugu