அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

கொவிட்-19 தடுப்பு மருந்தை மதிப்பிடுவதற்கான உயிரியல் மருத்துவ ஆய்வகமாக உயிரித் தொழில்நுட்பத் துறையின் டிஎச்எஸ்டிஐ அங்கீகரிக்கப்பட்டுள்ளது

Posted On: 05 OCT 2020 6:58PM by PIB Chennai

உயிரித் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் தன்னாட்சி பெற்ற நிறுவனமான டிரான்ஸ்நேஷனல் சுகாதார அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (டிஎச்எஸ்டிஐ), கொவிட்-19 தடுப்பு மருந்தை மதிப்பிடுவதற்கான உயிரியல் மருத்துவ ஆய்வகமாக சிஈபிஐ-ஆல் அங்கீகரிக்கப்பட்டுள்ளது 

சிஈபிஐ என்பது கொவிட்-19 தடுப்பு மருந்தை மதிப்பீடு செய்வதற்கான சர்வதேச ஆய்வகக் குழுமமாகும். ஆரம்பத்தில் ஆறு ஆய்வகங்களை சிஈபிஐ ஈடுபடுத்தும். அவை கனடா, இத்தாலி, இங்கிலாந்து, நெதர்லாந்து, வங்கதேசம் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் தலா ஒன்றென அமைந்திருக்கும்.

'தடுப்பு மருந்தை வேகமாக உருவாக்குவதன் மூலம் இந்தியா சார்ந்த பெருந்தொற்று தயார்நிலை: இந்திய தடுப்பு மருந்து உருவாக்கத்துக்கு ஆதரவு அளித்தல்' என்பதை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் உயிரித் தொழில்நுட்பத் துறை செயல்படுத்தி வருகிறது.

இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் உயிரித் தொழில்நுட்பத் துறை செயலாளர் டாக்டர் ரேணு சுவரூப் கூறுகையில், "கொவிட்-19 தடுப்பு மருந்து உருவாக்கம் மற்றும் பரிசோதனைக்கான முயற்சிகளை உயிரித் தொழில்நுட்பத் துறை ஆதரித்து வருகிறது," என்றார்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்தி குறிப்பை படிக்கவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1661807

**********************(Release ID: 1661855) Visitor Counter : 244