பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்

பிரதமர் நரேந்திர மோடியால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு சுதந்திரத்தை அளிக்கின்றன: மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்

Posted On: 05 OCT 2020 6:44PM by PIB Chennai

ஜம்மு-காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தில் உள்ள தெசில் ராம்நகர் பகுதியின் பசந்த்கர் மற்றும் சவுக்கி வட்டாரங்களில் இருக்கும் விவசாயிகள் மற்றும் கிராம தலைவர்கள் உள்ளிட்டவர்களோடு மத்திய வட கிழக்கு மாகாண வளர்ச்சி இணை அமைச்சரும் (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைகள், ஓய்வூதியம், அணு சக்தி மற்றும் விண்வெளி இணை அமைச்சருமான டாக்டர் ஜிதேந்திர சிங் இன்று உரையாடினார்.

அவர்களிடையே உரையாடிய அமைச்சர், பிரதமர் திரு நரேந்திர மோடியால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு சுதந்திரத்தை அளிக்கின்றன என்று கூறினார்.

"பயிர்களின் விலையை நிர்ணயிக்கும் சுதந்திரத்தையும், அவற்றை எங்கு வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும் விற்கும் சுதந்திரத்தையும் அளித்து, குறைந்தபட்ச ஆதரவு விலையிலும் விளைபொருட்களை விற்கும் வாய்ப்பையும் இந்த சட்டங்கள் வழங்குகின்றன," என்று அவர் தெரிவித்தார்.

சொந்த லாபத்துக்காக இந்த சட்டங்களை எதிர்ப்பவர்கள், இவற்றை வேளாண் சமூகத்தின் எதிரிகளைப் போலவும், சுரண்டுவர்களுக்கு ஆதரிப்பளிப்பவை போலவும் தவறாக சித்தரிக்கிறார்கள் என்று அவர் கூறினார்.

அப்பாவி விவசாயிகளை அவர்கள் தவறாக வழிநடத்துகின்றனர் என்றும் சமீபத்தில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வேளாண் சட்டங்களை குறித்து பொய்யான தகவல்களை அவர்கள் பரப்பி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்தி குறிப்பை படிக்கவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1661801

**********************



(Release ID: 1661848) Visitor Counter : 124