தேர்தல் ஆணையம்

மணிப்பூர் சட்டசபையில் உள்ள மூன்று காலியிடங்களை நிரப்புவதற்கான இடைத் தேர்தல் அறிவிப்பு

Posted On: 05 OCT 2020 3:52PM by PIB Chennai

மணிப்பூரில் உள்ள மூன்று சட்டசபை தொகுதிகளில் ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்புவதற்கு இடைத்தேர்தலை நடத்த இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

உள்ளூர் திருவிழாக்கள், வானிலை, பாதுகாப்பு படைகளின் போக்குவரத்து, பெருந்தொற்று உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை ஆய்வு செய்து வாங்கோய், சைத்து மற்றும் சிங்காட் ஆகிய தொகுதிகளில் இடைத்தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் முடிவெடுத்துள்ளது.

தேர்தல் பற்றிய அறிவிப்பு 2020 அக்டோபர் 13 அன்று வெளியிடப்படும். வேட்புமனுக்களை தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் 2020 அக்டோபர் 20 ஆகும். 2020 அக்டோபர் 21 அன்று வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்படும்.

வேட்புமனுக்களை திரும்ப பெற்றுக் கொள்வதற்கான கடைசி நாள் 2020 அக்டோபர் 23 ஆகும். 2020 நவம்பர் 7 அன்று வாக்குப்பதிவு நடைபெறும். வாக்கு எண்ணிக்கை 2020 நவம்பர் 10 அன்று நடைபெற்று தேர்தல் நடைமுறைகள் 2020 நவம்பர் 12 அன்று நிறைவு செய்யப்படும்.

மேற்கண்ட தொகுதிகள் அமைந்துள்ள மாவட்டங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.


மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்தி குறிப்பை படிக்கவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1661743


****

(Release ID: 1661743)(Release ID: 1661760) Visitor Counter : 93