ரெயில்வே அமைச்சகம்

பூல்பகன் மெட்ரோ நிலையத்தை ரயில்வே மற்றும் வர்த்தக அமைச்சர் திரு பியூஷ் கோயல் திறந்து வைத்தார்

Posted On: 04 OCT 2020 6:57PM by PIB Chennai

கிழக்கு-மேற்கு மெட்ரோவின் பூல்பகன் ரயில் நிலையத்தை இந்திய அரசின் ரயில்வே மற்றும் வர்த்தக அமைச்சர் திரு பியூஷ் கோயல் இன்று திறந்து வைத்தார்.

காணொலி சுட்டியின் மூலம் பூல்பகன் ரயில் நிலையத்திலிருந்து முதல் ரயில் சேவையையும் திரு பியூஷ் கோயல் துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய அவர், கொவிட்-19  பெருந்தொற்றுக்கிடையே கூடுதல் முயற்சிகளை எடுத்து பூல்பகன் ரயில் நிலையப் பணிகள் வெற்றிகரமாக நிறைவடைய காரணமாக இருந்த அனைவருக்கும் பாராட்டு தெரிவித்தார்.

பூல்பகன் மெட்ரோ ரயில் நிலையம் திறந்து வைக்கப்பட்ட காரணத்தால், கிழக்கு-மேற்கு மெட்ரோவின் சேவைகள் தற்போது பூல்பகன் வரை நீட்டிக்கப்பட்டுள்ளன. இந்த நீட்டிக்கப்பட்ட சேவைகள் பயணிகளுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும் என்று அமைச்சர் கூறினார்.

 

மேலும் விவரங்களுக்கு, இந்த செய்தி குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே படிக்கவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1661606

*****

(Release ID: 1661606


(Release ID: 1661693) Visitor Counter : 197