சுற்றுலா அமைச்சகம்

மத்திய சுற்றுலா அமைச்சகத்தின், எனது தேசத்தை பார் என்ற தொடரின் 58வது நிகழ்ச்சியாக, காந்தி, அகமதாபாத் மற்றும் தண்டி யாத்திரை குறித்த இணைய கருத்தரங்கு

Posted On: 04 OCT 2020 12:39PM by PIB Chennai

 மகாத்மா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு, சுற்றுலாத்துறை அமைச்சகம், தனது இணைய கருத்தரங்கு நிகழ்ச்சியில் அவருக்கு வணக்கம் செலுத்தி, அவரது தத்துவங்களுக்கும், போதனைகளுக்கும் புகழஞ்சலி செலுத்தியது. அதன் இணைய கருத்தரங்கு தொடர் நிகழ்ச்சியில், காந்தி, அகமதாபாத் மற்றும் தண்டி யாத்திரை குறித்த நிகழ்ச்சி நேற்று நடத்தப்பட்டது.

எனது தேசத்தை பார் தொடரின் 58வது நிகழ்ச்சியில் தண்டி யாத்திரையின் போது மகாத்மா காந்தி அகமதாபாத்தில் தங்கிய இடங்கள் பற்றி கவனம் செலுத்தப்பட்டது.

தென் ஆப்பிரிக்காவில் இருந்து கடந்த 1915ம் ஆண்டு நாடு திரும்பிய மகாத்மா காந்திதனது சுதந்திர போராட்ட இயக்கத்தை தொடங்க, குஜராத்தின் அகமதாபாத் நகரை தேர்வு செய்தார்.  1930ம் ஆண்டு வரை அவர் அங்குதான் இருந்தார். உப்புக்கு வரி விதிக்கப்பட்ட சட்டத்தை எதிர்த்து தண்டி யாத்திரையை ஏப்ரல் 6ம் தேதி  தொடங்கினார். மே 5ம் தேதி அவர் கைது செய்யப்பட்டு புனே கொண்டு வரப்பட்டார்.

காந்தி தண்டி யாத்திரை சென்ற இடங்களை சுற்றுலா பகுதியாக மேம்படுத்தும் நோக்கில் இந்த இணைய கருத்தரங்கு நடந்தது. குஜராத் சுற்றுலாத்துறை இயக்குனர திரு. ஜெனு தேவன் இந்த இணைய கருத்தரங்கை வழங்கினார். காந்தியுடன் தொடர்புடைய இடங்களை சுற்றுலா தலமாக மேம்படுத்த குஜராத்  அரசு, மத்திய சுற்றுலா அமைச்சகத்துடன் இணைந்து  எடுத்துள்ள நடவடிக்கைகளை அவர் விளக்கினார்.

அகமதாபாத் - ராஜ்கோட் - போர்பந்தர் - பர்தோலி - தண்டி ஆகிய பகுதிகள் காந்தி தொடர்புடைய பகுதிகளாக மேம்படுத்தப்படவுள்ளன.

மகாத்மா காந்தியின் தண்டி யாத்திரை மற்றும் காந்திஜியுடன் தொடர்புடைய பிற இடங்களை நினைவுகூரும் வகையில், தண்டி மரபு வழி பாதை திட்டம், பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் மேம்படுத்தப்படுகின்றன.   தண்டி யாத்திரையின் போது, 349 கி.மீ சபர்மதி - தண்டி வழித்தடத்தில்நதியத், ஆனந்த், நவ்சாரி, சூரத் அருகேயுள்ள தப்தி நதிக் கரை உட்பட 21 இடங்களில் காந்தி இரவு நேரத்தில் தங்கியுள்ளார். அந்த இடங்களும் மேம்படுத்தப்படவுள்ளன. இங்கு அடிப்படை வசதிகளுடன் குடில்கள் , நடை பாதைகள் அமைக்கப்படவுள்ளன.  தண்டி யாத்திரையை சுற்றுலா பயணிகள் நினைவு கூறும் வகையில் இந்த ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.

ஒரே பாரதம், உன்னத பாரதம் என்ற திட்டத்தின் கீழ் இந்தியாவின் வளமான பன்முகத்தன்மையை வெளிகாட்டும் வகையில், எனது தேசத்தை பார் என்ற தலைப்பில் இணைய கருத்தரங்க தொடரை சுற்றுலாத்துறை அமைச்சகம் நடத்துகிறது. இந்த தொடரை https://www.youtube.com/channel/UCbzIbBmMvtvH7d6Zo_ZEHDA/featured  என்ற இணையதளத்திலும், மத்திய சுற்றுலாத்துறை அமைச்சகத்தின் சமூக இணையதளங்களிலும் காணலாம்.

அடுத்த இணைய கருத்தரங்கு, ‘விதர்பாவின் அணிகலன்என்ற தலைப்பில் வரும் 10ம் தேதி காலை 11 மணிக்கு நடக்கிறது.

மேலும் விவரங்களுக்கு, இந்த செய்தி குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே படிக்கவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1661506

****************



(Release ID: 1661535) Visitor Counter : 241