பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்

வாகன எரிபொருளாக, இயற்கை எரிவாயுவை பயன்படுத்துவது பற்றி இந்தியா-ரஷ்யா இடையே முதல் முறையாக இணைய கருத்தரங்கு

प्रविष्टि तिथि: 02 OCT 2020 7:22PM by PIB Chennai

மோட்டார் வாகனங்களுக்கு இயற்கை எரிவாயுவை பயன்படுத்துவது பற்றி, இந்தியா-ரஷ்யா இடையே முதல் முறையாக நடக்கும்  இணைய கருத்தரங்குக்கு  பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயுத்துறை அமைச்சகம் மற்றும் ரஷ்ய எரிசக்தி துறை அமைச்சகம் ஏற்பாடு செய்தது.

இந்நிகழ்ச்சியில் துவக்கவுரை நிகழ்த்திய பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயுத்துறை அமைச்சகத்தின் செயலாளர் திரு.தரூண்கபூர், வாகன போக்குவரத்துக்கு இயற்கை எரிவாயுவை பயன்படுத்துவது தொடர்பாக இரு நாடுகள் இடையே, பிரதமர் திரு. நரேந்திர மோடி மற்றும் ரஷ்ய அதிபர் திரு. விளாடிமிர் புதின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டதாக தெரிவித்தார்.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தை செயல்படுத்துவதால், இரு நாடுகளும் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத இயற்கை எரிவாயுவை, வாகனங்களுக்கு பயன்படுத்தி பயனடையும் என திரு. தரூண்கபூர் தெரிவித்தார்.

ரஷ்ய இணை அமைச்சர் திரு. ஆன்டன் இன்யூட்சின் பேசுகையில், ‘‘ இந்த இணைய கருத்தரங்கில் பகிரப்பட்ட தகவல்கள், இரு நாடுகளின் கூட்டு நடவடிக்கைகள் மற்றும் முதலீட்டுக்கு பயனுள்ளதாக இருக்கும்’’ என்றார்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்தி குறிப்பை படிக்கவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1661090

****************


(रिलीज़ आईडी: 1661145) आगंतुक पटल : 196
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Bengali , Punjabi