பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம்
15 நாட்கள் தூய்மை கடைபிடிக்கிறது பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம்
Posted On:
02 OCT 2020 5:06PM by PIB Chennai
அக்டோபர் 1ம் தேதி முதல் 15ம் தேதி வரை மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம், தூய்மையை கடைபிடிக்கிறது. இந்த நாட்களில் சிறப்பு தூய்மை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. கொரோனா பரவல் நேரத்தில் இந்த தூய்மை நிகழ்ச்சிகள் முக்கியத்துவம் பெறுகின்றன.
15 நாள் தூய்மை நிகழ்ச்சியை, பஞ்சாயத்து ராஜ் அமைச்சக செயலாளர் திரு.சுனில் குமார் தொடங்கி வைத்தார். இத்துறையின் அனைத்து அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் இந்தியிலும், ஆங்கிலத்திலும் தூய்மை உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.
பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த வேண்டாம், என இந்நிகழ்ச்சியில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
தூய்மை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், எளிதில் மட்கும் காகிதத்தால் தயாரிக்கப்பட்ட பேனர்கள் முக்கிய இடங்களில் வைக்கப்பட்டிருந்தன.
இந்த 15 நாள் தூய்மை நிகழ்ச்சியில் அனைத்து மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் உள்ள பஞ்சாயத்து ராஜ் துறைகள் தீவிரமாக பங்கேற்க வேண்டும் என மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்தி குறிப்பை படிக்கவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1661022
****************
(Release ID: 1661099)
Visitor Counter : 159