குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்

காந்தி ஜெயந்தியின் 150-வது ஆண்டை குறிக்கும் வகையில் 150 நிகழ்ச்சிகளை காதி மற்றும் கிராமப்புற தொழில்கள் ஆணையம் நடத்தியது

Posted On: 01 OCT 2020 5:58PM by PIB Chennai

நாடு முழுவதும் 150 பிரம்மாண்ட நிகழ்ச்சிகளை காந்தி ஜெயந்தியின் 150-வது ஆண்டை குறிக்கும் வகையில் காதி மற்றும் கிராமப்புற தொழில்கள் ஆணையம் நடத்தியது.

நாட்டிலேயே முதல் முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட இத்தகைய நிகழ்ச்சிகளை காதி மற்றும் கிராமப்புற தொழில்கள் ஆணையத்தின் தலைவர் திரு வினய் குமார் சக்சேனா தொடங்கி வைத்தார்.

அஸ்ஸாம், மேகாலயா, திரிபுரா, மணிப்பூர், ஹிமாச்சல பிரதேசம், உத்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், ஜம்மு & காஷ்மீர் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் அதிகளவில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

தொடக்க விழாவில் பேசிய காதி மற்றும் கிராமப்புற தொழில்கள் ஆணையத்தின் தலைவர், "ஊரக மேம்பாடு தான் நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றும் என்று காந்தியடிகள் எப்போதுமே நம்பினார். பிரதமர் திரு நரேந்திர மோடியின் லட்சியமும் இது தான்," என்றார்.

விவசாயிகள், பெண்கள் மற்றும் வேலையில்லா இளைஞர்களுக்கு அதிகாரமளிக்கும் வகையிலேயே காதி மற்றும் கிராமப்புற தொழில்கள் ஆணையத்தின் பணிகள் அமைந்துள்ளதாக அவர் மேலும் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்தி குறிப்பை படிக்கவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1660702

****************


(Release ID: 1661008) Visitor Counter : 151