நிதி அமைச்சகம்

தற்சார்பு இந்தியா தொகுப்பின் இதுவரையிலான முன்னேற்றத்தை நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் ஆய்வு செய்தார்

Posted On: 01 OCT 2020 5:28PM by PIB Chennai

இந்தியாவில் கொவிட்-19 நோய்த் தொற்றுக்கு எதிரான நடவடிக்கைகளுக்காக இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவீத அளவுக்கான - அதாவது ரூ.20 லட்சம் கோடி அளவிலான சிறப்புப் பொருளாதார மற்றும் விரிவான தொகுப்புத் திட்டத்தை 2020 மே 12ஆம் தேதி மாண்புமிகு பிரதமர் திரு. நரேந்திர மோடி அறிவித்தார்.

தற்சார்பு இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற லட்சிய நோக்கிலான அழைப்பை அவர் விடுத்தார். தற்சார்பு இந்தியாவுக்கு - பொருளாதாரம், கட்டமைப்பு, செயல்பாட்டு முறை, துடிப்பான மக்கள், தேவை என்ற ஐந்து அம்சங்கள் தான் தூண்களாக இருக்கும் என்று அவர் கூறினார்.

பிரதமரின் அழைப்பைத் தொடர்ந்து, 2020 மே 13 முதல் 17 ஆம் தேதி வரையில் தொடர்ச்சியான செய்தியாளர் சந்திப்புகள் மூலம், தற்சார்பு இந்தியாவுக்கான திட்டங்களின் விவரங்களை நிதி, கார்ப்பரேட் விவகாரங்கள் துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்.

நிதி, கார்ப்பரேட் விவகாரங்கள் துறை அமைச்சகங்கள், தங்கள் இலாக்கா தொடர்பான அறிவிப்புகளை உடனடியாக அமல் செய்யத் தொடங்கின. பொருளாதாரத் தொகுப்புத் திட்டங்களின் அமலாக்கம் குறித்து தொடர்ச்சியாக நிதி அமைச்சர் நேரடியாகக் கண்காணித்து வருகிறார்.

நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சகத்தின் சார்பில் தற்சார்பு இந்தியா தொகுப்பை செயல்படுத்துதலில் இதுவரையிலான முன்னேற்றத்தை திருமதி நிர்மலா சீதாராமன் இன்று ஆய்வு செய்தார்.

சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் உள்ளிட்ட தொழில்களுக்கும் ரூ 3 லட்சம் கோடி மதிப்பிலான பிணையில்லா தானியங்கிக் கடன்கள் வழங்கப்படுகின்றன.

வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்காக பகுதி கடன் உறுதித்திட்டம் 2.0 – ரூபாய் 45 ஆயிரம் கோடி. 2020 செப்டம்பர் 25 வரை ரூ 25,055 கோடிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் ரூ 3,177 கோடி வழங்குவதற்கு பரிசீலனையில் உள்ளது.

வங்கி சாரா நிதி நிறுவனங்கள்/வீட்டுக் கடன் நிறுவனங்கள்/குறு நிதி நிறுவனங்களுக்கான ரூ 30,000 கோடி சிறப்பு நிதித் திட்டம்

வங்கி சாரா நிதி நிறுவனங்கள்/வீட்டுக் கடன் நிறுவனங்கள்/குறு நிதி நிறுவனங்களுக்கான ரூ 30,000 கோடி சிறப்புப் பணப்புழக்கத் திட்டத்துக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தப் பிறகு இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

இத்திட்டம் தொடர்பான சுற்றறிக்கையை வங்கி சாரா நிதி நிறுவனங்கள் மற்றும் வீட்டுக் கடன் நிறுவனங்களுக்கு 1 ஜூலை, 2020 அன்றே இந்திய ரிசர்வ் வங்கி அனுப்பியிருந்தது. சுமார் ரூ 11,120 கோடி நிதிக்காக 39 விண்ணப்பங்களுக்கு, 2020 செப்டம்பர் 30 வரை ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளன.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்தி குறிப்பை படிக்கவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1660691

****************(Release ID: 1661007) Visitor Counter : 230