நிதி அமைச்சகம்
சீர்திருத்தங்களை சிறப்பாக செயல்படுத்திய இன்னும் 2 மாநிலங்கள் ரூ 7,106 கோடி கூடுதல் கடன் பெற அனுமதி பெற்றன
Posted On:
02 OCT 2020 10:52AM by PIB Chennai
பொது விநியோக திட்டத்திலும், வர்த்தகம் செய்வதை எளிதாக்குவதிலும் சீர்திருத்தங்களை சிறப்பாக செயல்படுத்திய உத்திரப் பிரதேசம் மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய இரண்டு மாநிலங்கள் ரூ 7,106 கோடி கூடுதல் கடன் பெற மத்திய நிதி அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.
ஒரே தேசம் ஒரே ரேஷன் அட்டை திட்டத்தை செயல்படுத்தியதன் மூலம் பொது விநியோக திட்டத்தில் சீர்திருத்தத்தை நிறைவு செய்த ஆறாவது மாநிலமாக உத்திரப் பிரதேசம் ஆனது. இதன் மூலம், திறந்த வெளி சந்தைக் கடன்களில் இருந்து ரூ 4,851 கோடி நிதி பெற இந்த மாநிலம் தகுதி பெற்றது.
இதன் மூலம் கொவிட்-19-ஐ எதிர்த்து போரிடுவதற்கு தேவைப்படும் கூடுதல் நிதி இம்மாநிலத்துக்கு கிடைக்கும். நாட்டிலேயே வணிகம் செய்வது எளிதாக உள்ள மாநிலங்களின் பட்டியலில் ஆந்திரப் பிரதேசம் முதலிடம் பிடித்துள்ளது.
இதன் மூலம், திறந்த வெளி சந்தைக் கடன்களில் இருந்து ரூ 2,525 கோடி நிதி பெற இந்த மாநிலம் தகுதி பெற்றது. ஒரே தேசம் ஒரே ரேஷன் அட்டை திட்டத்தை செயல்படுத்தியதன் மூலம் பொது விநியோக திட்டத்தில் சீர்திருத்தத்தையும் ஆந்திரா ஏற்கனவே நிறைவு செய்துள்ளது.
தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் உள்ள அனைத்து தகுதியுடைய ரேசன் அட்டைதாரர்கள்/பயனாளிகளுக்கும் அவர்களுக்கு உரித்தான பொருள்களை நாட்டில் எங்கு வேண்டுமானாலும் பெற்றுக்கொள்ளும் வசதியை அளிப்பதற்காக ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை திட்டத்தை செயல்படுத்துவது இந்திய அரசின் உணவு & பொது விநியோகத் துறையின் முக்கிய முன்னுரிமைகளில் ஒன்றாகும்.
இந்த திட்டத்தின் கீழ், மின்னணு விற்பனை முனையக் கருவியைப் பொருத்துவதன் மூலம் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த அமைப்பை நிறுவுவது, பயனாளிகளின் ஆதார் எண்களை அவர்களின் குடும்ப அட்டைகளோடு இணைப்பது மற்றும் மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் உயிரி அடையாளத் தொழில்நுட்ப முறையைக் கொண்டு விற்பனை முனையக் கருவி பரிவர்த்தனைகளை செயல்படுத்துதல் ஆகியவற்றின் மூலம், குடும்ப அட்டைகளின் நாடு தழுவிய பெயர்வுத்திறன் வசதியின் துணையோடு அதிக அளவில் மானியங்கள் அளிக்கப்படும் உணவு தானியங்கள் விநியோகிக்கப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்தி குறிப்பை படிக்கவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1660916
****************
(Release ID: 1660993)
Visitor Counter : 218