சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்

காற்று மாசை கட்டுப்படுத்த இன்னும் ஒருங்கிணைந்த நடவடிக்கை தேவை: திரு பிரகாஷ் ஜவடேகர்

प्रविष्टि तिथि: 01 OCT 2020 4:59PM by PIB Chennai

வட இந்தியாவில், குறிப்பாக தேசிய தலைநகர் பகுதியில், கடந்த சில வருடங்களாக நீடித்து வரும் காற்று மாசு குறித்த ஆய்வுக் கூட்டம் ஒன்றுக்கு மத்திய சுற்றுச்சூழல் வனம் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சர் திரு பிரகாஷ் ஜவடேகர் இன்று தலைமை தாங்கினார்.

பல்வேறு நடவடிக்கைகள் ஏற்கனவே எடுக்கப்பட்டிருக்கும் நிலையிலும், காற்று மாசை கட்டுப்படுத்த இன்னும் ஒருங்கிணைந்த நடவடிக்கை தேவை என்று திரு பிரகாஷ் ஜவடேகர் கூறினார்.

90 நிமிடங்களுக்கும் அதிகமாக நீடித்த கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், ஆய்வு கூட்டம் பயனுள்ள வகையில் நடந்ததாகவும் மத்திய மற்றும் மாநில அரசுகள் காற்று மாசை கட்டுப்படுத்த ஏற்கனவே பல்வேறு நடவடிக்கைகளை செயல்படுத்தி உள்ளதாகவும் தெரிவித்தார்.

வைக்கோலை எரிப்பதன் மூலம் காற்று மாசு ஏற்படுவதை தடுக்க, மாநிலங்களுக்கு மத்திய அரசு நிதி உதவி அளித்து உள்ளதாக அவர் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்தி குறிப்பை படிக்கவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1660661

****************


(रिलीज़ आईडी: 1660717) आगंतुक पटल : 175
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Punjabi