எரிசக்தி அமைச்சகம்

உற்பத்தியில் இரட்டை இலக்க வளர்ச்சியான 13.3 சதவீதத்தை இரண்டாம் காலாண்டில் என்டிபிசி குழுமம் எட்டியுள்ளது

இடுகை இடப்பட்ட நாள்: 01 OCT 2020 1:48PM by PIB Chennai

மத்திய எரிசக்தி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் என்டிபிசி குழும நிறுவனங்கள், உற்பத்தியில் இரட்டை இலக்க வளர்ச்சியை இரண்டாம் காலாண்டில் எட்டியுள்ளன.

2020 ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில், கடந்த வருடத்தில் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும் போது 13.3 சதவீதம் அதிக உற்பத்தியை என்டிபிசி குழும நிறுவனங்கள் செய்துள்ளன.

2020 ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான அரையாண்டில் என்டிபிசி குழும நிறுவனங்களின் உற்பத்தி 145.87 பியு-வாக இருந்தது. கடந்த வருடம் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது இது 0.4 சதவீதம் அதிகமாகும்.

2020 ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான அரையாண்டில் என்டிபிசி நிலக்கரி நிலையங்கள் மிகச் சிறப்பான முறையில் செயல்பட்டு 94.21 சதவீதம் இருப்பை எட்டியிருந்தன. கடந்த வருடத்தின் இதே காலகட்டத்தில் இது  90.26 சதவீதமாக இருந்தது.

 

 

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்தி குறிப்பை படிக்கவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1660573

 

********

 


(வெளியீட்டு அடையாள எண்: 1660671) வருகையாளர் எண்ணிக்கை : 180
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Manipuri , Assamese , Bengali , Punjabi , Telugu