உள்துறை அமைச்சகம்

நாட்டின் சட்டங்களை மீறுவதற்கு மனித உரிமைகள் ஒரு காரணமாக இருக்க முடியாது

Posted On: 29 SEP 2020 6:37PM by PIB Chennai

அம்னேஸ்டி இன்டர்நேஷனல் எடுத்த நிலையும்,  அதன் அறிக்கைகளும் துரதிஷ்டவசமானது, மிகைப்படுத்தப்பட்டது மற்றும் உண்மைக்கு புறம்பானது.

வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் இருபது வருடங்களுக்கு முன் ஒரே ஒரு முறை தான் அம்னேஸ்டி இன்டர்நேஷனல் அனுமதி பெற்றது.

அப்போதிலிருந்து அம்னேஸ்டி இன்டர்நேஷனல் மீண்டும் மீண்டும் விண்ணப்பித்த போதிலும் அதைத் தொடர்ந்து வந்த அரசுகளால் வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் அனுமதி மறுக்கப்பட்டது. ஏனென்றால் அவ்வாறு ஒப்புதல் அளிக்க சட்டத்தில் இடமில்லை.

ஆனால் நேரடி வெளிநாட்டு முதலீடு என்னும் போர்வையில் இந்தியாவில் பதிவு செய்த நான்கு நிறுவனங்களுக்கு அம்னேஸ்டி யுகே அதிக அளவில் பணம் அனுப்பியது.

இத்தகைய சட்ட விரோத செயல்பாடுகளின் காரணமாக முந்தைய அரசும் அம்னேஸ்டி இன்டர்நேஷனல் வெளிநாட்டிலிருந்து பணம் பெற அனுமதி மறுத்தது.

 

மனிதநேய சேவைகள் பற்றிய அறிக்கைகள் எல்லாம் சட்டத்தை மீறிய செயல்களை பற்றிய கவனத்தை திசை திருப்புவதற்காகத் தான்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பை படிக்கவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1660095

********


(Release ID: 1660255) Visitor Counter : 344