சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

'கொவிட்-19 - பாதுகாப்பான பணியிடம், தொழிற்சாலைகளுக்கான வழிகாட்டுதல்கள்' என்னும் புத்தகத்தை டாக்டர் ஹர்ஷ்வர்தனும், திரு சந்தோஷ் குமார் கங்க்வாரும் வெளியிட்டனர்

Posted On: 29 SEP 2020 5:37PM by PIB Chennai

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல  அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்தனும், மத்திய பணியாளர் மற்றும் வேலைவாய்ப்பு இணை அமைச்சர் (தனிப் பொறுப்பு) திரு சந்தோஷ் குமார் கங்க்வாரும் 'கொவிட்-19 - பாதுகாப்பான பணியிடம், தொழிற்சாலைகளுக்கான வழிகாட்டுதல்கள்' என்னும் புத்தகத்தை  வெளியிட்டனர்.

மெய்நிகர் தளத்தின் மூலமாக நடந்த இந்த நிகழ்ச்சியில், நிதி ஆயோக் உறுப்பினர் டாக்டர் வி கே பாலின் முன்னிலையில் இந்த புத்தகத்தை அமைச்சர்கள் வெளியிட்டனர்.

புத்தகத்தை வெளியிடுவது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த டாக்டர் ஹர்ஷ் வர்தன், "சரியான நேரத்தில் இந்த சிறப்பான வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன. தொழிற்சாலை பணியாளர்களின் நலனுக்கு இது பங்காற்றும்," என்றார்.

நிகழ்ச்சியில் பேசிய திரு சந்தோஷ் குமார் கங்க்வார், "தொழிற்சாலை பணியாளர்களின் பாதுகாப்புக்கான இந்த வழிகாட்டுதல்கள் மக்களுக்கு ஊக்கத்தை அளிக்கும். தற்போதைய நிலைமைக்கு நம்மை மனதளவில் தயார் படுத்திக்கொண்டு, கொவிட் பற்றிய விழிப்புணர்வை அனைவரிடமும் ஏற்படுத்தவேண்டும்," என்றார்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்தி குறிப்பை படிக்கவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1660056

********



(Release ID: 1660239) Visitor Counter : 131