ரெயில்வே அமைச்சகம்

இந்திய ரயில்வேயில் பயனாளர் கிடங்கு செயல் திட்டம் (யூ.டி.எம்.) தொடக்கம்

Posted On: 28 SEP 2020 5:59PM by PIB Chennai

ரயில்வே தகவல் வழிமுறைகள் மையம் ( Centre for Railway Information Systems - CRIS) உருவாக்கிய பயனாளர் கிடங்கு செயல் திட்டத்தை (User Depot Module - UDM)  டி & ஆர்.எஸ். (T&RS)  உறுப்பினர் திரு. பி.சி. சர்மா 28.09.2020 அன்று மேற்கு ரயில்வேயின் அனைத்து கிடங்குகளிலும் டிஜிட்டல் வசதி மூலம் தொடங்கி வைத்தார்.

இந்திய ரயில்வேயின் அனைத்து மண்டலங்களிலும் விரைவில் இந்தத் திட்டம் அமல் செய்யப்படும்.  இந்திய ரயில்வேயில் கிடங்குகள் சங்கிலித் தொடர் அமைப்பு ஏற்கெனவே டிஜிட்டல் மயமாக்கப் பட்டுள்ளது. இருந்த போதிலும் பயனாளர் முனையங்களில் அலுவலர்கள் மூலமாகவே இந்தச் செயல்பாடுகள் நடைபெற்று வந்தன. புதிய திட்டம் அமலுக்கு வருவதால் உடனுக்குடன் பரிவர்த்தனைகள் நடைபெறுதல், தொடர்புடைய அனைத்துத் துறையினருக்கும் இடையில் ஆன்லைன் தகவல் பரிமாற்றம் ஆகியவை சாத்தியமாகும். அலுவலர்கள் கையாள்வதில் இருந்து டிஜிட்டல் முறைக்கு மாறுவதன் மூலம் இது எளிதாகும்.  பயனாளர் கிடங்கு உள்ளிட்ட முழு சங்கிலித் தொடர் அமைப்பும் டிஜிட்டல் மயமாக்கப்படுவது இதன் மூலம் உறுதி செய்யப்படும்.

சிக்கனம், செயல்திறன் மற்றும் வெளிப்படைத்தன்மை இதன் மூலம் அதிகரிக்கும் என்பதுடன் சொத்து மேலாண்மை அளவு மேம்படும். சேவை நிலை உயர்ந்து, வாடிக்கையாளர்களுக்கு திருப்திகரமான சேவை அளிப்பது இதன் மூலம் உறுதி செய்யப்படும்.

 

*****


(Release ID: 1659873) Visitor Counter : 283