பாதுகாப்பு அமைச்சகம்

பாதுகாப்பு தளவாடங்கள் கொள்முதல் செயல்முறை-2020-ஐ பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டார்

Posted On: 28 SEP 2020 3:54PM by PIB Chennai

பாதுகாப்பு தளவாடங்கள் கொள்முதல் செயல்முறை-2020- பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் புது தில்லியில் இன்று வெளியிட்டார். 2002-ஆம் ஆண்டு முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட பாதுகாப்பு தளவாடங்கள் கொள்முதல் செயல்முறை, உள்நாட்டு தொழில்களுக்கு ஊக்கம் அளிக்கவும், பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தியில் தற்சார்பை எட்டவும் அவ்வப்போது திருத்தப்பட்டு வருகிறது.

பாதுகாப்பு தளவாடங்கள் கொள்முதல் செயல்முறை-2020- வடிவமைப்பதற்காக முதன்மை ஆய்வுக் குழு ஒன்றை தலைமை இயக்குநர் (கொள்முதல்) திரு அபூர்வ சந்திரா தலைமையில் ஆகஸ்ட் 2019-இல் பாதுகாப்பு அமைச்சகம் அமைத்தது.

2020 அக்டோபர் 1 முதல் பாதுகாப்பு தளவாடங்கள் கொள்முதல் செயல்முறை-2020 அமலுக்கு வரும். பல்வேறு பங்குதாரர்களிடம் இருந்து பெறப்பட்ட கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை கருத்தில் கொண்டு பாதுகாப்பு தளவாடங்கள் கொள்முதல் செயல்முறை-20200- உருவாக்கும் பணிகள் ஒரு வருடத்துக்கும் மேல் நடைபெற்றன.

 

அரசின் தற்சார்பு இந்தியா லட்சியத்தை சார்ந்து உருவாக்கப்பட்ட பாதுகாப்பு தளவாடங்கள் கொள்முதல் செயல்முறை-2020, மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் உள்நாட்டு தொழில்களுக்கு அதிகாரம் அளிப்பதையும், இந்தியாவை சரவதேச உற்பத்தி மையமாக உருவாக்குவதையும் நோக்கங்களாக கொண்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்தி குறிப்பை படிக்கவும்:

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1659746

-----  


(Release ID: 1659780) Visitor Counter : 313