வடகிழக்குப் பகுதி வளர்ச்சி அமைச்சகம்

'இலக்கு வடகிழக்கு 2020'-ஐ மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா நாளை துவக்கி வைக்கிறார்

प्रविष्टि तिथि: 26 SEP 2020 2:48PM by PIB Chennai

மத்திய உள்துறை அமைச்சரும் வடகிழக்கு குழுவின் தலைவருமான திரு அமித் ஷா,

'இலக்கு வடகிழக்கு 2020'-ஐ மெய்நிகர் முறையில் நாளை துவக்கி வைக்கிறார்.

வடகிழக்கு பிராந்திய வளர்ச்சி அமைச்சகத்தின் வருடாந்திர நிகழ்ச்சியான இலக்கு வடகிழக்கு, இந்த பிராந்தியத்தை பற்றிய தகவல்களை நாட்டின் இதர பகுதிகளுக்கு எடுத்துச் செல்லவும், தேசிய ஒருமைப்பாட்டை வலுப்படுத்தவும் நடத்தப்படுகிறது.

மத்திய வட கிழக்கு மாகாண வளர்ச்சி இணை அமைச்சரும் (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைகள், ஓய்வூதியம், அணு சக்தி மற்றும் விண்வெளி இணை அமைச்சருமான டாக்டர் ஜிதேந்திர சிங் இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்வார்.

கொவிட்-19-க்கு பிறகு நாட்டில் மிகவும் விரும்பப்படுகிற சுற்றுலா மற்றும் தொழில் பகுதிகளில் ஒன்றாக வட கிழக்கு பிராந்தியம் விளங்கும் என்று டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார். வளர்ந்து வரும் மகிழ்ச்சியூட்டும் இலக்குகள் என்பது 'இலக்கு வடகிழக்கு 2020' நிகழ்ச்சியின் மையக்கருவாகும்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்தி குறிப்பை படிக்கவும்:

 

https://pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=1659284


(रिलीज़ आईडी: 1659383) आगंतुक पटल : 302
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Bengali , Assamese , Punjabi