ஆயுஷ்

ஊட்டச்சத்து அறிவியல் மற்றும் முன்னேற்றங்களைப் பற்றிய தேசிய இணையக் கருத்தரங்கை ஆயுஷ் அமைச்சகம் நடத்தியது

Posted On: 25 SEP 2020 12:58PM by PIB Chennai

ஆயூஷ் அமைச்சகத்தின் 'நோய் எதிர்ப்பு சக்திக்காக ஆயுஷ்' பிராச்சரத்தின் ஒரு பகுதியாக, 'சத்தான உணவு' (போஷன் உணவு) என்னும் தலைப்பில் ஊட்டச்சத்து அறிவியல் மற்றும் முன்னேற்றங்களைப் பற்றிய தேசிய இணையக் கருத்தரங்கை ஆயுஷ் அமைச்சகம் சமீபத்தில் நடத்தியது.

நிபுணர்கள், ஆராய்ச்சியாளர்கள், மருத்துவ ஊட்டச்சத்துவியலாளர்கள், அறுவை சிகிச்சை நிபுணர்கள் மற்றும் யோகா மற்றும் இயற்கை மருத்துவர்கள் இந்த இணையக் கருத்தரங்கில் பங்கேற்று தங்களது கருத்துகளை பகிர்ந்துக் கொண்டனர்.

ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தன்னாட்சி பெற்ற அமைப்பான யோகா மற்றும் இயற்கை மருத்துவ ஆராய்ச்சிக்கான மத்தியக் குழு இந்த இணையக் கருத்தரங்கை ஏற்பாடு செய்தது.

அமெரிக்காவில் உள்ள வடக்கு டகோடா மாநில பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் காளிதாஸ் ஷெட்டி, இங்கிலாந்தில் உள்ள ரீடிங்க் பல்கலைக்கழகத்தின் இணை பேராசிரியர் டாக்டர் விமல் கரானி, மருத்துவ நிபுணர் டாக்டர் பிரபு நேசர்கிகர், சம்பூர்ண ஆகார் என்னும் புது நிறுவனத்தின் (ஸ்டார்ட் அப்) தலைவர் டாக்டர் அச்சுதன் ஈஸ்வர் ஆகியோர் இந்த கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்தி குறிப்பை படிக்கவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1658934

******



(Release ID: 1658979) Visitor Counter : 105