ஆயுஷ்

கொவிட் -19 சிகிச்சைக்கு வாசா (அததோடவாசிகா) மற்றும் குடுச்சி ஆகிய மருந்துகளின் சாத்தியக்கூறுகள் குறித்து மருத்துவ ஆய்வை ஆயுஷ் அமைச்சகம் மேற்கொள்ளவுள்ளது

Posted On: 25 SEP 2020 1:16PM by PIB Chennai

கொவிட் -19 க்கான விரைவான தீர்வுகளின் அவசியத்தை கருத்தில் கொண்டு, ஆயுஷ் அமைச்சகம் பல வழிகள்  மூலம் சாத்தியமான பல்வேறு தீர்வுகள் குறித்த முறையான ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, கொவிட்-19 சிகிச்சையில் வாசா கானா, குடிச்சி கானா மற்றும் வாசா -குடிச்சி கானா மருந்துகளின் பங்கை  மதிப்பீடு செய்வதற்கான மருத்துவ ஆய்வை தொடங்கும் திட்டத்தக்கு சமீபத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. 

இந்த ஆய்வு தில்லியில் உள்ள அகில இந்திய ஆயுர்வேதா மையத்தில்(ஏஐஐஏ), அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி கவுன்சிலின் மரபியல் மற்றும் ஒருங்கிணைந்த உயிரியில் மையத்துடன் கூட்டாக மேற்கொள்ளப்படும். இதற்கான விரிவான திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

இந்த ஆய்வு நெறிமுறைகளை நவீன மருத்துவ நிபுணர்களும் ஆய்வு செய்துள்ளனர். அவர்களது பரிந்துரைகளும் இணைக்கப்பட்டுள்ளன. நிறுவன நெறிமுறைக் குழு (ஐ.இ.சி) போன்ற தேவையான ஒப்புதல்களுக்கு உட்பட்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்படும்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்தி குறிப்பை படிக்கவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1658943

*******



(Release ID: 1658966) Visitor Counter : 228