சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
கொவிட்-19-க்கு பிறகு மீண்டெழும் திட்டத்தின் முக்கிய இடத்தில், இயற்கையை வைக்குமாறு உலக நாடுகளுக்கு இந்தியா வலியுறுத்தல்
Posted On:
24 SEP 2020 7:51PM by PIB Chennai
'இயற்கையோடு ஒன்றி வாழ்தல்' என்னும் நமது லட்சியத்தை அடைய கொவிட்-19-க்கு பிறகான மீண்டெழும் திட்டத்தின் முக்கிய இடத்தில் இயற்கையை வைக்குமாறு உலக நாடுகளை மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சர் திரு பிரகாஷ் ஜவடேகர் வலியுறுத்தினார்.
மெய்நிகர் முறையில் நடைபெற்ற '2020-க்கு பிறகான பல்லுயிரியல்: பூமியின் அனைத்து உயிர்களும் பகிர்ந்து கொள்ளூம் எதிர்காலத்தை உருவக்குதல்' என்னும் தலைப்பிலான அமைச்சர்கள் அளவிலான வட்டமேசை கூட்டத்தில் இந்தியாவின் சார்பாக பங்கேற்ற திரு ஜவடேகர் இவ்வாறு கூறினார்.
பல்லுயிரியல் குறித்த ஐக்கிய நாடுகள் சபையின் மாநாட்டுக்கு ஒரு வாரத்துக்கு முன்னர் சீனாவால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த கூட்டத்தில், பல்லுயிர் பாதுகாப்பு குறித்தும், நீடித்த வளர்ச்சி குறித்தும் கருத்துகள் பரிமாறிக்கொள்ளப்பட்டது.
கூட்டத்தில் பேசிய திரு ஜவடேகர், இயற்கை வளங்களின் வரைமுறையில்லா சுரண்டலும், நிலையில்லாத உணவு பழக்கங்களும், உணவு உண்ணும் முறைகளும் மனித வாழ்க்கைக்கு ஆதரவளிக்கும் அமைப்புகளின் அழிவுக்கு வழி வகுப்பதை கொவிட்-19 எடுத்துக்காட்டியுள்ளதாக கூறினார்.
மேலும் விவரங்களுக்கு, இந்த செய்தி குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே படிக்கவும்:
https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1658791
*
PSB/GB
(Release ID: 1658842)
Visitor Counter : 208