ஆயுஷ்

'நோய் எதிர்ப்பு சக்திக்காக ஆயுஷ்' பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக புதுமையான மின்-ஓட்டப்பந்தயத்துக்கு ஆயுஷ் அமைச்சகம் ஆதரவு

Posted On: 24 SEP 2020 7:19PM by PIB Chennai

கொச்சியில் உள்ள ராஜகிரி சமுக அறிவியல் கல்லூரி மற்றும் ராஜகிரி வணிகப் பள்ளி ஆகியவற்றுடன் இணைந்து புதுமையான மின்-ஓட்டப்பந்தயத்தை (இ-மாரத்தான்) ஆயுஷ் அமைச்சகம் நடத்துகிறது.

'நோய் எதிர்ப்பு சக்திக்காக ஆயுஷ்' பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இந்த மின்-ஓட்டப்பந்தயத்துக்கு ஆயுஷ் அமைச்சகம் ஆதரவு அளித்துள்ளது. மூன்று மாதங்களுக்கு இந்தப் பிரச்சாரம் நடைபெறுகிறது.

சுகாதார ஊக்கமளிப்பு மற்றும் நோய் தடுப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றை தொழில்நுட்பம், ஓட்டப்பந்தயம் மற்றும் உடல் நல திட்டங்கள் போன்றவற்றோடு இணைக்கும் இந்த மின்-நிகழ்ச்சி, பங்குபெறுவோரின் வாழ்வில் நேர்மறைத் தன்மையையும், நல்ல ஆரோக்கியத்தையும் சேர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

emarathon.rajagiri.edu என்னும் இணைய பக்கத்தில் இதில் பங்குபெற விருப்பமுள்ளோர் தங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். 2020 செப்டம்பர் 28-இல் இருந்து 2020 அக்டோபர் 10 வரை 15 நாட்களுக்கு இந்த நிகழ்ச்சி நடக்கும்.

மேலும் விவரங்களுக்கு, இந்த செய்தி குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே படிக்கவும்:

 

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1658770

 

*

PSB/GB


(Release ID: 1658833) Visitor Counter : 175